Prasanna
குரு உபதேசம் – 3435
முருகா என்றால், மது அருந்துதலிருந்து விடுபடுவார்கள், உயிர்க்கொலை செய்து புலால் உண்ணுவதிலிருந்து விடுபடுவார்கள், மிகுதி காமம் மட்டுப்படும், பொய் சொல்லும் செயலை செய்யமாட்டார்கள், பிறர் சொத்தை அபகரிக்கும் தீய எண்ணம் மறைந்து நல்லெண்ணம் தோன்றும், கொடும் கோபம் கட்டுப்படும், பிறர் வளர்ச்சி கண்டு பொறாமைப்படாமல் அனைவரையும் சகோதரராய் பார்க்கின்ற மனோபாவம் வளரும். முருகன் அருள் கூடிட பாவங்கள் விலகி நல்லன விளங்கி நன்மார்க்கம் சென்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்வார்கள்.
குரு உபதேசம் – 3434
முருகா என்றால், என்றும் அழிவிலாத இளமையும், அழகும் உள்ள முருகப்பெருமானின் திருவடியை பூஜிக்க, பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3433
முருகா என்றால், சரியை, கிரியை, யோகம், ஞானம் என்கிற ஞானமடைதலுக்கான நான்கு படிநிலைகளையும் அறிந்து கடைப்பிடித்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம்.