Prasanna
குரு உபதேசம் – 3432
முருகா என்றால், சைவ உணவில் நம்பிக்கை வரச்செய்தும், அன்னதானம் செய்வதில் ஆர்வமும், அதற்கு தேவையான பொருளுதவிகளை செய்தும், மேன்மேலும் புண்ணியத்தைப் பெருகிடச் செய்தும், காமதேகத்தின் பலகீனங்களை உணரச் செய்து மெல்லமெல்ல, அவசரப்படாமல் மென்மையான ஒரு வேதியியல் செய்து, காமதேகத்தை நீங்கச் செய்து ஒளி உடம்பை பெறச் செய்து, என்றும் அழிவில்லாத வாய்ப்பை தருவான் முருகப்பெருமான். ஞானத்தலைவனும், ஞானிகள் தலைவனும் முருகப்பெருமான்தான் என்பதை அறிகின்ற அறிவே சிறப்பறிவாகும்.
குரு உபதேசம் – 3431
சிவபுராணம், கோளறுபதிகம் போன்ற முற்றுப்பெற்ற முனிவர்களின் ஞான நூல்களை படித்துவிட்டு, மனம் ஒருநிலைப்பட்டு “ஓம் அகத்தீசாய நம” என்று குறைந்தது 24 நிமிடம் பூஜை செய்திட, மனம் செம்மைப்படும். அதிக நேரம் பூஜை செய்தால், பூஜையில் சோர்வு ஏற்பட்டு மனத்தளர்ச்சி வந்து, பூஜை செம்மையாக செய்ய முடியாது என்பதை உணர்ந்து, தவறாது தொடர்ந்து பூஜை செய்யும் நிலையைப் பெறலாம்.
குரு உபதேசம் – 3430
முருகா என்றால், எதையும் செய்து முடிக்கக் கூடிய வல்லமை வரும், உயிர்க்கொலை செய்து புலால் உண்பதை விடுத்து சைவ உணவை மேற்கொள்வார், சோம்பல் நீங்கும், மது அருந்தும் பழக்கத்திலிருந்து விடுபடுவார்கள், வரவுக்கு மீறி செலவு செய்வதிலிருந்து விடுபட்டு போலி கௌரவத்திற்கு ஆளாகாமல் நெறிக்குட்பட்ட வாழ்வை வாழ்வார்கள், தானும் தன்னை சார்ந்த குடும்பத்தினருக்கும் ஆதரவாய் அவப்பெயர் ஏற்படாத வாழ்வை வாழ்வார்கள்.
குரு உபதேசம் – 3429
முருகா என்றால், இளமை, அழகு, கல்வி, பதவி இன்னும் அநேக சிறப்புகள் இருந்தாலும் “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்ற மகா மந்திரத்தை சொல்லியும், பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்தால்தான் ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள முடியும். நாம் பெற்ற இளமையும், அழகும், கல்வியும், பதவியும் இன்னும் பெற்ற எல்லாமும் ஒரு காலத்தில் அழிந்தே போய்விடும் ஆனால் என்றும் அழியாத முருகனின் அருள் மட்டுமே ஆன்மாவைப் பற்றி தொடர்ந்து அழியாது உடன்வருவதுடன் நம்மையும் அழிவிலாமையாகிய மரணமிலாப் பெருவாழ்வையும் தந்து அழிவிலாமையை … Read more
குரு உபதேசம் – 3428
முருகா என்றால், மற்ற உயிரினங்களுக்கு இல்லாத வகையிலேதான், மிகச்சிறப்பான வகையிலே மனித தேகம் அமைக்கப்பட்டுள்ளது என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3427
முருகா என்றால், பலபிறவிகளில் செய்த பாவம், வறுமை, நோய், பகை, பொல்லாத காமம் ஆகிய கொடுமைகள் வந்து தாக்கும். அதை வெல்லுதற்கு உபாயம் “ஓம் அகத்தீசாய நம” என்ற மகாமந்திரத்தை குறைந்தது தினம் ஒன்றிற்கு ஆயிரத்தெட்டு முறையாவது ஜெபித்து வர வேண்டும். ஜெபித்து வரவர மெல்லமெல்ல வினைகள் குறையும் என்பதை அறியலாம்.