Prasanna
குரு உபதேசம் – 3423
முருகா என்றால், நம்மிடம் என்னென்ன குணக்கேடுகள் உள்ளது என்பதை அறிந்து கொள்ளவும், அதை அறிந்து நீக்கிக் கொள்ளவும், நீக்கும் வழிமுறையையும் அறியலாம்.
குரு உபதேசம் – 3422
உடம்பாகிய சந்திரகலையையும், உயிராகிய சூரியகலையையும், அக்னி கலையாகிய சுழிமுனையையும் அறியச் செய்து, அவனே நம்முள் சார்ந்து முக்கலைகளையும் இயக்கி நமது புருவ மத்தியாகிய சுழிமுனையில் ஒடுங்கிவிடுவான். முருகப்பெருமானின் அருளைப் பெறுவதற்கு காமம், கோபம், பொறாமை, பேராசை, வன்மனம் போன்ற குணக்கேடுகளே தடையாய் இருக்கும். முருகனது ஆசியைப் பெறபெற, தடையாய் உள்ள குணக்கேடுகளெல்லாம் முருகனருளால் நம்மிடமிருந்து நீங்கி அவனருளாலே அவன்தாள் வணங்கும் வாய்ப்பை பெற்று முழுமை பெறலாம்.
குரு உபதேசம் – 3421
யோகம், ஞானம் என்ற அனைத்திற்கும் தலைவன் முருகப்பெருமான்தான் என்று அறிந்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள வேண்டும் என்பதை அறியலாம். புண்ணியவானும், ஞானத்தலைவனுமாகிய முருகப்பெருமான் நாமத்தை “ஓம் சரவண பவ” என்றோ “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ “ஓம் சரவணஜோதியே நமோ நம” என்றோ மகா மந்திரங்களை ஜெபித்துவர வேண்டும். உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்தும் மாதம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்தும் வந்தால் முருகப்பெருமானின் ஆசியைப் பெறலாம் என்று அறியலாம்.