Prasanna
குரு உபதேசம் – 3416
முருகா என்றால், வறுமை தீரும், பகை தீரும், நோயற்ற வாழ்வும், உடல் ஆரோக்கியமும் உண்டாகும். பொல்லாத காம தேகத்தின் சீற்றம் மெல்லமெல்ல குறையும், ஞானமென்பதே முருகன் திருவடிதான், முருகன் திருவடியை பூசிக்க பூசிக்கத்தான் மனம் செம்மைப்பட்டு ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம். ஞானம் என்றால் அறிவாகும். அந்த அறிவு பிறப்பின் இரகசியத்தை அறிந்து பிறப்பையும் இறப்பையும் வெல்லுவதாக அமைவதே ஞானமாகும்.
குரு உபதேசம் – 3415
தன்னை அறிந்து, தன்னை வென்று தகைமை பெற்றவன்தான் முருகப்பெருமான். அவனது தாளினைப் பற்றி இறைஞ்சுவதே தகைமையாகும் என்று அறியலாம்.
குரு உபதேசம் – 3414
மரணமிலாப் பெருவாழ்வு உண்டு என்பதை நிரூபித்து வெற்றி கண்டவன் முருகப்பெருமான்தான் என்பதையும் அறியலாம். முருகப்பெருமான் வெற்றி பெற்றதோடு, அந்த ஞானத்தை தமது அடியவர்க்கும் அருள் செய்கின்றான் முருகன் என்பதையும் அறியலாம்.
குரு உபதேசம் – 3413
நாம் எடுத்த இந்த ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள வேண்டுமென்றால், ஈடு இணையில்லாத பேராற்றல் பெற்ற பெருந்தகையாளன் முருகப்பெருமானை வணங்கி ஆசி பெற்றால்தான் முடியும்.