Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 3412

பசி, காமம், தளர்ச்சி, ஈளை, இருமல் என அனைத்தையும் வென்று வெற்றி கண்டவன் தான் முருகப்பெருமான். இந்த நிலையை நாமும் அடைய விரும்பினால், உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து மாதம் ஒருவருக்கோ அல்லது இருவருக்கேனும் பசியாற்றுவித்து காலை, மாலை சுமார் பத்து நிமிடமேனும் “ஓம் சரவண ஜோதியே நமோ நம” என்றும் “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றும் மந்திரஜெபம் செய்து வந்தால் நாமும் அந்த நிலையை அடையலாம்.

குரு உபதேசம் – 3411

பல்லாயிரங்கோடி ஜென்மங்கள் தவம் செய்து பெற்ற தவப்பயனை, தனது அடியவர்க்கு அருளுகின்ற பெருந்தகையாளனே முருகப்பெருமான் என்று அறிகின்ற சிறப்பறிவைப் பெறலாம்.

குரு உபதேசம் – 3410

பல கோடி யுகங்களாக தவம் செய்து வெற்றிகண்டு பெற்ற ஞானானந்த அனுபவத்தையும், தாம் அடைந்த உயர் ஞானத்தையும், தாம் பெற்ற பிறவாநிலைதனையும் தமது திருவடி பற்றினோர்க்கும் அருளி தமது சீடர்களுக்கும் தாம் வெற்றிகண்ட வகையிலே, அவர்களையும் நடத்தி சென்று, வெல்ல முடியாத காமதேகத்தை வென்றிட உதவி செய்து, உடன் வந்து தாம் அடைந்த அருட்ஜோதி நிலையை தமது திருவடி பற்றிய சீடனையும், அடைந்திட செய்து தம்மைப் போலவே ஆக்கி கொள்வான் முருகப்பெருமான். இது சத்திய வாக்காகும்.