குரு உபதேசம் – 3405
தயவும் முருகன், தவமும் முருகன், முருகனே தயவும், முருகனே தவமும் ஆகி நின்றதை உணரலாம்.
தயவும் முருகன், தவமும் முருகன், முருகனே தயவும், முருகனே தவமும் ஆகி நின்றதை உணரலாம்.
கடவுள் நம்பிக்கையும், பாவபுண்ணியத்தில் நம்பிக்கையும் வரும். மேலும் கடவுளை அடைவதற்கு சைவ உணவும், பசியாற்றுவிப்பதும் வழித்துணை என்ற உண்மை அறிவைப் பெறலாம்.
ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்று தொடர்ந்து மந்திர ஜெபம் செய்து கொண்டே இருக்க வேண்டும். மந்திரஜெபம்தனை தொடர்ந்து செய்ய செய்ய, அது முருகன் ஆசியினை பெற உபாயமாய் இருக்கும், முருகப்பெருமான்தான் செய்தற்கரிய அரும் தவங்கள் பலகோடி செய்து, காமத்தை வென்ற முதல் மாமனிதன் என்பதை முதலில் அறிய வேண்டும். ஒரு முறை முருகா! என்று சொன்னால் அகத்தீசன் முதல் நவகோடி சித்தரிஷி கணங்களின் ஆசியை ஒரு நொடியில் பெறலாம் என்பது சத்திய வாக்காகும்.
காமம், கோபம், மோகம், லோபம் ஆகிய அனைத்தையும் வெல்லக் கூடிய அறிவையும், ஜென்மத்தைக் கடைத்தேற்றக் கூடிய வல்லமையையும் பெறலாம்.
தானமும், தியானமும் செய்கின்ற மக்களுக்கு இடையூறு செய்யவல்ல நவக்கிரகங்களே தமது குறைபாடுகளால், அவர்களுக்கு எந்த பாதகமும் வராது காத்து, சாதகமாக செயல்பட்டு, அவர்களுக்கு நலவாழ்வை அருளும். பாவிகளுக்கு பாதகமாகவும், நவக்கிரகங்கள் புண்ணியவான்களுக்கு சாதகமாகவும் இருக்கும்.
முருகப்பெருமான்தான் முதன் முதலில் ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொண்டு மரணமிலாப் பெருவாழ்வை பெற்றவனென்றும், மரணமிலாப் பெருவாழ்வை “ஜீவ தயவு” எனும் கொள்கையை கடைபிடித்ததால்தான் பெற முடிந்தது என்பதையும், ஜீவதயவே ஜென்மத்தைக் கடைத்தேற்றும் என்பதையும் அறியலாம். முருகனது அருளைப் பெற்று, ஜீவதயவினை கடைப்பிடித்து நாமும் ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம் என்பதை அறியலாம்.
தோன்றிய உயிர்கள் அனைத்தும் அழிவது இயல்பே. ஆனால் அருந்தவ முயற்சியினால் என்றும் அழியாத நிலையினை பெற்ற முதல் தலைவன், ஆற்றல் பொருந்திய முருகப்பெருமான்தான் என்பதை அறியலாம்.
ஒருவன் செய்த நன்றியை எக்காலத்தும் மறவாதிருக்க வேண்டும் என்ற அறிவைப் பெறலாம். மேலும் பலருக்கு உதவி செய்தாலும், பயனை எதிர்பார்த்து செய்யக் கூடாது, பயன் கருதி செய்கின்ற உதவிகள் பிறவியை உண்டுபண்ணும். பயனை எதிர்பார்க்காமல் செய்கின்ற உதவிகளே பிறவியை அற்றுப் போகச் செய்யும் என்பதையும் அறியலாம்.