குரு உபதேசம் – 4002
முருகா என்றால், பிற உயிர்களுக்கு மகிழ்ச்சியை உண்டு பண்ணக் கூடிய வாய்ப்பையும், சந்தர்ப்பத்தையும் நமக்கு உண்டாக்கி அமைத்துத் தருவான் முருகப்பெருமான்.
முருகா என்றால், பிற உயிர்களுக்கு மகிழ்ச்சியை உண்டு பண்ணக் கூடிய வாய்ப்பையும், சந்தர்ப்பத்தையும் நமக்கு உண்டாக்கி அமைத்துத் தருவான் முருகப்பெருமான்.
முருகா என்றால், சைவ உணவை மேற்கொள்ள செய்தும், தொடர்ந்து அன்னதானம் செய்ய வைத்தும், தன் திருவடியை தொடர்ந்து பூஜிக்க வாய்ப்பு தந்தும், வன்மனத்தை நீக்கி உயர்ந்த பண்புள்ள தாய்மை குணத்தை தந்தருள்வான் முருகப்பெருமான். முருகப்பெருமான் திருவடியே கதியென்று நம்பி பூஜை செய்கின்ற மக்களுக்கே இந்த வாய்ப்பை அருள்வான் முருகப்பெருமான். சான்றோன் நட்பே ஆன்ற துணையாகும்!
முருகா என்றால், பல கோடி ஜென்மங்களாக புண்ணியங்கள் செய்திருந்தாலன்றி ஞானத்தலைவன் முருகப்பெருமானின் திருவடிகளைப் பற்றி பூஜிக்க முடியாது என்பதை அறியலாம்.
முருகா என்றால், பசி, காமம், தளர்ச்சி, ஈளை, இருமல் என அனைத்தையும் வென்று வெற்றி கண்டவன் தான் முருகப்பெருமான். இந்த நிலையை நாமும் அடைய விரும்பினால் உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து மாதம் ஒருவருக்கோ அல்லது இருவருக்கேனும் பசியாற்றுவித்து காலை, மாலை சுமார் பத்து நிமிடமேனும் “ஓம் சரவண ஜோதியே நமோ நம” என்றும் “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றும் மந்திரஜெபம் செய்து வந்தால் நாமும் அந்த நிலையை அடையலாம்.