Prasanna
குரு உபதேசம் – 3996
முருகா என்றால், தான் அடைந்த பேரின்பத்தை தனது அடியவர்களுக்கும் அருளி கடைத்தேற்றி, காத்து அருள் செய்ய வல்லவன் முருகப்பெருமான்தான் என்று அறியலாம்.
குரு உபதேசம் – 3995
முருகா என்றால், முக்திக்கு வித்தகன் முருகப்பெருமான் என்று அறிகின்ற சிறப்பறிவைப் பெறலாம். ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி! போற்றி!! என்று காலை 10 நிமிடமும், மாலை 10 நிமிடமும் மந்திர ஜெபம்தனை ஜெபித்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள வேண்டும்.
குரு உபதேசம் – 3994
முருகா என்றால், முதன் முதலில் காமதேகத்தை வென்று ஒளி உடம்பைப் பெற்ற மாவீரன் முருகப்பெருமான் என்று அறியலாம். முருகப்பெருமானின் ஆசிபெற்ற மக்களுக்கு காமதேகம் நீங்கி ஒளிதேகம் பெற்று என்றும் அழிவிலாத மரணமிலாப் பெருவாழ்வைப் பெறலாம் என்றும் அறியலாம்.