Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 3993

முருகா என்றால், மரணமிலாப் பெருவாழ்வையும், ஞானத்தையும் முதன் முதலாக கண்டுபிடித்தவனும், அறிந்தவனும், அறிந்து கடைத்தேறி வெற்றி பெற்ற முதல் மனிதனும் முருகனே என்றும் மனிதன் கடவுளும் ஆகலாம் என்ற பேருண்மையையும் அவன்தான் முதன்முதலில் கண்டவனும், அடைந்தவனும் ஆவான் என்பதையும் அறியலாம்.

குரு உபதேசம் – 3992

முருகா என்றால், இருவினையற்ற பெருந்தெய்வம் முருகன் திருவடியே இருவினையறுக்க துணையாய் வரும் என்பதை அறியலாம்.வினை வென்ற திருமுருகன் திருவடித் துணையின்றி வேறொன்றாலும் வினை வெல்ல முடியாது என்பதையும் அறியலாம்.

குரு உபதேசம் – 3991

முருகா என்றால், பாவ சுமைகளிற்கு காரணம் நாம் பல ஜென்மங்களில் உயிர்க்கொலை செய்து, புலால் உண்டதாலும், யான் என்ற கர்வத்தாலும், கொடும் கோபத்தாலும், பொல்லாத காமத்தாலும், பேராசையினால் பிறர் பொருளை அபகரித்ததாலும், பிறர் வளர்ச்சி கண்டு பொறாமைப்படுகின்ற காரணத்தாலும் வருகின்றது என்பதை அறியலாம். பாவ சுமைகளை நீக்கிட விரும்புகின்றவர்கள் உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து மாதம் ஒருவருக்கேனும் பசியாற்றுவித்தும், கருணையே வடிவான முருகப்பெருமான் திருவடியை “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்று அதிகாலை 10 நிமிடமேனும் மந்திர … Read more

குரு உபதேசம் – 3990

முருகா என்றால், உடம்பை காப்பாற்றிக் கொள்வதற்கு எந்தெந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பதை அறிய செய்தும், அதை உண்ணச் செய்தும், உடம்பை பல ஆண்டுகள் உறுதியாக வைத்துக் கொள்ளக்கூடிய அறிவைப் பெறலாம்.

குரு உபதேசம் – 3989

முருகா என்றால், ஆறறிவு படைத்த மனிதன்தான் மற்ற உயிர் மகிழும்படி வாழ்கின்ற அறிவைப் பெறலாம்.

குரு உபதேசம் – 3988

முருகா என்றால், இதுவரை கணக்கிலடங்கா சித்தர்களை உருவாக்கியது மட்டுமல்லாமல் இனியும் கணக்கிலடங்கா சித்தர்களை உருவாக்க வல்லவன் ஞானத்தலைவன் முருகப்பெருமான் தான் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் – 3987

முருகா என்றால், உடலைப் பற்றியும் உயிரைப் பற்றியும் முழுமையாக அறிந்து உடலையும் உயிரையும் சேர்க்கின்றதான ஒரு அதிஅற்புத வேதியியல்தனையும் கண்டுபிடித்தவன் முருகனே என்பதை உணரலாம். மாபெரும் ஞான இரகசியங்கள் அடங்கிய வேதியியல் பெருந்தொகுப்பினை யாரொருவராலும் அறியவோ, சிந்திக்கவோ, கற்கவோ, கற்று தேறவோ, தேறி கடைத்தேறவோ, கடைத்தேறி முற்றுப்பெறவோ வேதியனாம் ஆதி ஞானத்தலைவனாம் ஞானத்திற்கே ஏகபோக அதிபதியாம் முருகன் அருள் இல்லையேல் அணுவளவும் முன்னேற முடியாது என்பதை உணரலாம்.