Prasanna
குரு உபதேசம் – 3986
முருகா என்றால், சைவத்திற்கு தலைவன் முருகன் என்றும் சைவத்தை கடைப்பிடித்து ஜென்மத்தைக் கடைத்தேற்ற முருகனது ஆசி பெற்றால்தான் முடியும் என்பதையும் அறியலாம். முருகனது ஆசி பெறாமல் ஜென்மத்தைக் கடைத்தேற்ற முடியாது வேறு மார்க்கம் ஏதுமில்லை என்பதையும் உணரலாம்.
குரு உபதேசம் – 3985
முருகா என்றால், எந்த அளவிற்கு பிற உயிர்களுக்கு மகிழ்ச்சியை உண்டு பண்ணுகின்றானோ அந்த அளவிற்கு அவனது நிலை உயரும் என்பதை முருகன் அருளால் அறியலாம். பல உயிர்கள் வாழ்க வாழ்க என மனதார வாழ்த்தும் போது அந்த உயிர்களின் எண்ண அலைகள் உயிர்களை மகிழ்வித்தவனுக்கு சென்று மகிழ்வித்தவன் ஆன்மாவை மேன்மேலும் ஆக்கம் பெற செய்கிறது. எல்லா உயிர்களும் பஞ்சபூதங்களால் ஆனதே, இயற்கையே பஞ்சபூதமாகும். ஆதலினால் பஞ்சபூதத்தினால் ஆன உயிர்களை மகிழ்விக்க மகிழ்விக்க பஞ்சபூதமே மனம் மகிழ்ந்து ஆசி … Read more
குரு உபதேசம் – 3984
முருகா என்றால், மும்மலக் குற்றம்தான் பிறவிக்கு காரணம் என்று அறிந்து மும்மலக் குற்றத்தை வேருடன் நீக்கி வெற்றி கண்டு மரணமிலாப் பெருவாழ்வைப் பெற்றவரும், இளம் சூரியனைப் போன்ற ஒளிதேகத்தினை பெற்றவனும், என்றும் மாறா இளமை உடையவனுமாகிய முருகப்பெருமான் ஆசி பெற்றுக் கொள்ள நினைப்பதுவே சிறப்பறிவாகும். முருகனது ஆற்றல் அளவிட முடியாதது. ஒரு நொடியில் பல்லாயிரங்கோடி அண்டங்களைப் படைப்பான். எறும்பை யானையாக்குவான், யானையை எறும்பாக்குவான். 90 வயது நிரம்பிய முதியவனையும் 16 வயது வாலிபனாக்கும் வல்லமை பெற்றோன் ஆற்றல் … Read more
குரு உபதேசம் – 3983
முருகா என்றால், காமம், கோபம், பொறாமை, பேராசை, உயிர்க்கொலை செய்து புலால் உண்ணுதல் ஆகியவை பிறவிக்கு காரணமாக அமைகிறது என்பதை அறியச் செய்து பிறவிக்கு காரணமாக அமைகின்ற இப்பாவச் செயல்களை உணரவும், இச்செயல்களை வாழ்விலே செய்யாமல் தவிர்க்கவும் இவற்றைச் செய்து மேலும் பாவியாகாதிருக்கவும் முருகன் திருவடித் திருத்துணையால் தான் முடியும் என்பதை அறிந்து முருகன் திருவடி பற்றினாலன்றி இந்த பாதக செயல்களினின்று தப்பிக்க இயலாது என்பதையும் அறிந்து கொள்ளலாம்.