Prasanna
குரு உபதேசம் – 3979
முருகா என்றால், மூச்சுக்காற்றின் இயல்பறிந்து மூச்சுக்காற்றையும் அதன் தன்மையும் தெளிவுபட கற்று வசப்படாத மூச்சுக்காற்றை வசப்படுத்தி இரேசித்து, பூரித்து, கும்பித்து புருவமத்தியில் தம்பித்திட தம்பித்த அவர்களுக்கு மரணம் இல்லை, பிறப்பும் இல்லை என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3978
முருகா என்றால், எந்தெந்த செயல்களால் மீண்டும் பிறவி வரும் என்பதை அறியச் செய்து அந்தந்த செயல்களில் இருந்து வினை சூழாது காத்து பிறவா நிலை அடையும் மார்க்கம்தனை உபதேசித்து வழிநடத்தி அருள்செய்து காப்பவன் முருகப்பெருமான் தான் என்பதை அறிய முடியும்.
குரு உபதேசம் – 3977
முருகா என்றால், சிந்தையால் வரும் குற்றமும், செயலால் வரும் குற்றமும், சொல்லால் வரும் குற்றமும் அவரவர் இதன் முன் பல ஜென்மங்களிலே செய்திட்ட பாவத்தினால்தான் வருகின்றது என்பதை அறிந்து ஊழ்வினை அகற்ற வல்லாளனாம் முருகனது திருவருள் துணையால் இதை வெல்லலாம் என்பதை அறிந்து ஞானத்தலைவன் முருகப்பெருமான் திருவடியைப் பற்றி வினை வென்று சிந்தை, செயல், சொல் குற்றங்கள் நீங்கியும் இனி அவற்றினால் வினையேதும் ஏற்படா வண்ணம் சிந்தையும், செயலும், சொல்லும் குற்றமற்ற குணமே வடிவான குமரன் அருள் … Read more