Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 3976

முருகா என்றால், குரு என்றாலும் குருநாதன் என்றாலும் அது முருகன்தான் என்பதை அறிய வேண்டும். முருகப்பெருமான் அருளினை பெற விரும்புகின்றவர்கள் உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து சைவ உணவை மேற்கொண்டு சிறந்த முயற்சி உடையோராய் பொருளை ஈட்டி தன்னையும் தனது குடும்பத்தினரையும் சார்ந்தோரையும் காப்பாற்றுவதோடு மட்டுமல்லாது வருகின்ற விருந்தை உபசரித்தும் தன்னை சார்ந்தோர்க்கு பாதுகாப்பாய் இருந்தும், காலை மாலை ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி என்று குறைந்தது பத்து நிமிடமேனும் நாமஜெபமாக சொல்லி மகாமந்திரத்தை உரு ஏற்றி … Read more

குரு உபதேசம் – 3975

முருகா என்றால், எந்தெந்த செயல்களால் மீண்டும் பிறவி வரும் என்பதை அறியச் செய்து அந்தந்த செயல்களில் இருந்து வினை சூழாது காத்து பிறவா நிலை அடையும் மார்க்கம்தனை உபதேசித்து வழிநடத்தி அருள்செய்து காப்பவன் முருகப்பெருமான் தான் என்பதை அறிய முடியும்.

குரு உபதேசம் – 3974

முருகா என்றால், பாவத்தையும் புண்ணியத்தையும் அறிந்து பாவமே மும்மல தேகமாக அமைந்து பிறவிக்கு காரணமாகிறது என்பதையும் அறிந்து, நம்மை வஞ்சித்து பிறவிகளை தருகின்ற பாவத்தின் சம்பளமான காமதேகத்தினில் உள்ள மும்மல கசடை நீக்கி என்றும் அழியாத ஞானதேகமான ஒளி உடம்பை பெற என்றும் மாறா இளமையும், முதன்முதலில் முற்றுப்பெற்ற மாமுனியும், எல்லையில்லா பேராற்றலும் பெருங்கருணையும், தாயினும் தயவுடை தன்னிகரில்லா தனிப்பெரும் தலைமைத் தெய்வமாம் முருகனின் அருளைப் பெற்றாலன்றி வேறொன்றினாலும் ஆகாது என்பதையும் உணரலாம்.