Prasanna
குரு உபதேசம் – 3973
முருகா என்றால், குரு என்றாலும் குருநாதன் என்றாலும் அது முருகன்தான் என்பதை அறிய வேண்டும். முருகப்பெருமான் அருளினை பெற விரும்புகின்றவர்கள் உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து சைவ உணவை மேற்கொண்டு சிறந்த முயற்சி உடையோராய் பொருளை ஈட்டி தன்னையும் தனது குடும்பத்தினரையும் சார்ந்தோரையும் காப்பாற்றுவதோடு மட்டுமல்லாது வருகின்ற விருந்தை உபசரித்தும் தன்னை சார்ந்தோர்க்கு பாதுகாப்பாய் இருந்தும், காலை மாலை ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி என்று குறைந்தது பத்து நிமிடமேனும் நாமஜெபமாக சொல்லி மகாமந்திரத்தை உரு ஏற்றி … Read more
குரு உபதேசம் – 3971
முருகா என்றால், ஞானப்பேரொளியாம் முருகப்பெருமான்தான் காமவிகாரத்தை நீக்கித்தந்து காமவிகாரமற்றவனாக மாற்றுவான், பொருட்பற்றை நீக்குவான், பொறாமை இல்லாத பெருங்குணத்தை தருவான், கோபத்தினை நீக்கி சாந்த மனத்தை உண்டு பண்ணுவான், மன்னிக்கும் மனப்பான்மையை அருளிக் காப்பான், பழிவாங்கும் உணர்ச்சிகளை அற்றுப்போகச் செய்வான், தாய்மை குணத்தையும் அருளுவான், நமது குணக்கேடுகள் அத்துணையையும் நீக்கி நமது பாவங்களையெல்லாம் பொடிப்பொடியாக்கி நம்மைக் கடைத்தேற்றி ஞானியும் ஆக்குபவன் முருகப்பெருமான் அன்றி வேறொருவர் இல்லை என்பதை அறியலாம். அந்த முருகப்பெருமான்தான் யுகயுகத்தும் தாமே உலகோர்பால் கருணை கொண்டு … Read more
குரு உபதேசம் – 3970
முருகா என்றால், மரணமிலாப் பெருவாழ்வு பெற்றவன் முருகன் என்றும், அவர் ஆசி பெற்ற அகத்தீசரும் மற்ற அனைத்து ஞானிகளும் மரணமிலாப் பெருவாழ்வு பெற்றவர்களே என்றும் அறியலாம். முருகனைப் போற்றுவோம், இனி பிறவா மார்க்கத்தை அடைவோம். முருகப்பெருமானையும் முருகனின் ஆசி பெற்ற அகத்தீசரையும் மற்றும் அருணகிரிநாதர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர், திருமூலர், போகமகாரிஷி போன்ற ஞானிகளை புகழ்ந்து பேசினால் பேசுகின்றவர்களுக்கும் மரணமில்லை, கேட்பவருக்கும் மரணம் இல்லை.