Prasanna
குரு உபதேசம் – 3969
முருகா என்றால், திருவாசகம், திருஅருட்பா, திருமந்திரம் மற்றும் அருணகிரிநாதர் எழுதிய நூல்கள் படிக்கக் கூடிய அறிவைப் பெறலாம். தவத்திற்குரிய வைராக்கிய திடசித்த அறிவையும் பெறலாம்.
குரு உபதேசம் – 3968
முருகா என்றால், தோற்றம், இயக்கம், வளர்ச்சி, தளர்ச்சி, வீழ்ச்சி அனைத்திற்கும் மூல காரணமாய் இருப்பது எல்லாவற்றையும் தோற்றி, வளர்த்து அழிக்கின்றதான இயற்கையே என்று முருகன் அருளால் அறியலாம். எந்த இயற்கை நம்மை தோற்றுவித்து வளர்த்து அழிக்கின்றதோ அந்த இயற்கை அன்னையின் துணைகொண்டே இயற்கையின் சுழற்சியை வென்று இயற்கையினின்று வெளிப்பட்டு தூய்மையாய் ஆகி இயற்கை அன்னையோடு கலந்து மரணமிலாப் பெருவாழ்வை பெறலாம் என்னும் மாபெரும் இரகசியமதனை பலகோடி வருடங்கள் அரும்பாடுபட்டு பலபல நிலைகளில் தோல்வியுற்று தோல்வியுற்று இறுதியில் ஒரு … Read more
குரு உபதேசம் – 3967
முருகா என்றால், தயவே முருகனாய் இருப்பதினால் முருகன் திருவடியை பூசித்தால் தயை சிந்தையும் பெருகும், செல்வமும் பெருகும். பெற்ற செல்வத்தைக் கொண்டு பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்து மேலும் மேலும் புண்ணியங்களைச் செய்து செய்து தயவே வடிவினனாய் ஆகி தயவுடை முருகப்பெருமானின் அருளைப் பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்வான்.
குரு உபதேசம் – 3965
முருகா என்றால், பெறுதற்கரிய மானுடதேகம் பெற்றவர்கள், பெருமைக்குரிய முருகப்பெருமானை பூசிப்பதற்கே இத்தேகம் பெற்றபயன் என்று அறியலாம். பெருமைக்குரிய முருகப்பெருமானின் அளவிடற்கரிய பெருமைகளை போற்றி புகழ்வதே பிறவிப்பயன் என்பதையும் அறியலாம்.