Prasanna
குரு உபதேசம் – 3964
முருகா என்றால், ஒன்பது வாசல் உடைய இந்த உடம்பினிலே எழுகின்ற காற்றை பத்தாம் வாசலாகிய புருவமத்தியில் செலுத்தி ஒரு ஒப்பற்ற வேதியியல் செய்து உடல்மாசு நீக்கி ஒளி பெற்ற தேகத்தை ஒளி உடம்பை பெற்று என்றும் அழியாத நித்திய தேகம் பெற்ற தலைவனே முருகன் என்று அறியலாம்.
குரு உபதேசம் – 3963
முருகா என்றால், முன் செய்த பாவங்களே இதயத்தில் உருகி தியானிக்க முடியாத பலகீனத்தை உண்டு பண்ணும் என்பதை உணர்ந்து கருணையே வடிவான முருகப்பெருமான் திருவடிகளை பூசிக்க பூசிக்க வினை குறையும் என்பதை அறிவான். வினை குறைய குறைய அறிவு தெளிவடையும். அறிவு தெளிய தெளிய எது பாவம்? எது புண்ணியம்? என்று உணர்த்தப்படும். பாவம் நீங்கி புண்ணியம் பெருக பெருக கல் மனமும் கரையும். கல் மனம் உருகி கரைவதற்கு உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, பசித்த … Read more
குரு உபதேசம் – 3962
முருகா என்றால், மரணத்தை வென்ற மாமேருக்களான ஞானிகள் இயற்றிய திருஅருட்பா, திருவாசகம், திருப்புகழ், திருமந்திரம், தேவாரம் போன்ற ஞான நூல்களைப் படித்தால் ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம் என்று அறியலாம்.