Prasanna
குரு உபதேசம் – 3961
முருகா என்றால், முதன் முதலில் மரணமில்லாப் பெருவாழ்வு பெற்று நிலை உயர்ந்த மகான் முருகப்பெருமான் ஒருவரே என்பதை அறிந்து அவர்தம் திருவடியை பூசித்து ஆசிபெற வேண்டும் என்பதை அறிவர். “ஓம் சரவண ஜோதியே நமோ நம’’ என்ற மகாமந்திரத்தை ஜெபித்தால் முருகப்பெருமான் பெற்ற பேரின்பத்தை நாமும் பெறலாம் என்று அறியலாம். ஒப்பற்ற முருகப்பெருமான் திருவடியைப் போற்றுவோம், புகழ்வோம், பெருமை பெறுவோம்.
குரு உபதேசம் – 3960
முருகா என்றால், ஆயிரம் ஆயிரம் ஆகமங்களை கற்பதைவிட அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் கற்றிட சித்தியை அடையலாம் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3959
முருகா என்றால், ஆதி ஞானத்தலைவன் முருகனே என்பதை அறிந்து கொள்ள முடியும், முருகனை வணங்கிய நாம், செய்த புண்ணியத்தால் பிழைத்தோம். அதை விடுத்து தண்டனைக்கு உள்ளாகி செத்துபோனவர்களையோ, செத்துப் பிறக்கின்ற மனிதர்களையோ வணங்காது, என்றும் அழிவில்லாத பிறப்பு இறப்பற்ற மரணமிலாப் பெருவாழ்வைப் பெற்ற அருள்ஜோதி வடிவினனான முருகப்பெருமானை வணங்குகிறோம். முதல் ஞானியாம் முருகப்பெருமான் நமக்கு தாயாக தந்தையாக வழிநடத்தும் அருள் குருவாக கடைத்தேற்றி காத்தருள் புரிகின்ற தெய்வமாக உள்ளான். அவனது அன்பின் அளவு அளவிலாது அவனது தயவு … Read more