Prasanna
குரு உபதேசம் – 3958
முருகா என்றால், முருகனே புண்ணியமும் அருளும், முருகப்பெருமான்தான் அனைத்தும் என்றறிந்து புண்ணியத்தையும் பூஜையையும் செய்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம். தொடர்ந்து அன்னதானமும் தொடர்ந்து பூஜையும் செய்ய செய்ய மனம் உருகும். மனஉருக்கத்திற்கு தடையாய் இருப்பது முன் செய்த பாவமே! முன்செய்த பாவமெல்லாம் போக்கிடும் படியாக வைராக்கியத்துடன் வினைதீர்க்க வல்ல முருகனின் நாமத்தையோ முருகனது வழி வந்த ஞானிகளின் நாமங்களை நாமஜெபமாக சொல்ல சொல்ல வினை நீங்கி மனஉருக்கம் ஏற்பட்டு ஞானிகள் ஆசிகளை பெறலாம். ஆயினும் பூஜையும் புண்ணியமும் … Read more
குரு உபதேசம் – 3957
முருகா என்றால், ஞானத்திற்குரிய அறிவையும், அதை அடைவதற்குரிய வைராக்கியத்தையும் பெறலாம். முருகனே வைராக்கியம்! வைராக்கியமே முருகன்! என்றும் அறியலாம்.
குரு உபதேசம் – 3956
முருகா என்றால், உணவிலே சைவம், உள்ளத்திலே சைவம், சிந்தையில் சைவம், உணர்ச்சியிலே சைவம், செயலிலே சைவம், சொல்லிலே சைவம், பார்வையிலே சைவம் என்றே அனைத்திலும் சைவமாகிய தூயநிலைதனை அறிவதோடு அதைக் கடைப்பிடித்திட தக்க வாய்ப்பையும் பெற்ற அவர்கள் சைவநிலைகளின் நெறியுணர்ந்து, அந்தந்த நிலைகளிலே உள்ள அசுத்தமாகிய அசைவத்தினை நீக்கி சைவமாகிய சுத்தநிலையில் தளராது நின்றிட மனஉறுதியும், திடசித்த வைராக்கியத்தையும், அதற்குரிய தக்க சூழ்நிலைகளையும் முருகன் அருளால் பெற்று தூயநிலை நிற்பார்கள் முருகனை பற்றினோரெல்லாம். முருகன் அருள் கூடினாலன்றி … Read more