குரு உபதேசம் – 3955
முருகா என்றால், அகத்தீசன் முதல் அனைத்து ஞானிகளுக்கும் வாசி நடத்திக் கொடுத்தும் உயிரைப்பற்றியும், உடம்பைப் பற்றியும், அறியச் செய்தும் உயிர் மாசு, உடல் மாசு பற்றி அறியச் செய்தும், உயிர்மாசும், உடல்மாசும் நீங்குதற்கு வழிவகை செய்து அருளியும் தாம் அடைந்த பேருண்மையாம் ஞானத்தை அருள் பெற்றோர் அறியச் செய்தும் அவர்களை கடைத்தேற்றி ஞானிகளாக்கியே மகிழ்பவன் தாயினும் மிக்க தயவுடைத் தெய்வம் முருகனேயாவான்.