Prasanna
குரு உபதேசம் – 3949
முருகா என்றால், முருகனை வணங்குவோர் பூகம்பத்தாலும், புயலாலும், ஆழிப்பேரலையாலும், நீரால், நெருப்பால், கொலைக்கருவியால், எரிமலையால், கடும்பனியால், கொடிய வெயிலால், வெள்ளத்தால், அதிநுட்பமான கொலைக்கருவிகளாலும், பகைவர்களாலும், அரூபநிலை நின்று தாக்கும் பேய், பூத, பைசாச கணங்களாலும் இடையூறு ஏதும் வராது என்று அறியலாம். எல்லாவற்றையும் அந்த பக்தனின் பக்திக்கு மெச்சி அந்த ஆதி ஞானத்தலைவனே அனைத்தையும் பக்தனுக்காக தாமே தாங்கி தம்மை நம்பிய பக்தனுக்கு பாதுகாப்பாய் நின்று காத்தருள் புரிவான் என்பதை அறியலாம். நாம் செய்த புண்ணியத்தால் தான் … Read more
குரு உபதேசம் – 3948
முருகா என்றால், முற்றுப்பெற்ற முனிவனாகிய முருகப்பெருமான் திருவடிகளை பூசிக்க பூசிக்க, முன்செய்த பாவங்கள் தீரும், பாவங்கள் தீரதீர உண்மைப்பொருளை அறியக்கூடிய சிறப்பறிவைப் பெறலாம்.
குரு உபதேசம் – 3947
முருகா என்றால், பொறிபுலன்கள் தீயவழியில் செல்லாது தடுத்து ஆட்கொண்டு நம்மைக் காப்பாற்றும் வல்லவன் முருகப்பெருமான் என்று அறியலாம்.