குரு உபதேசம் – 3946
முருகா என்றால், சத்தியமும் பொதுநலமும் உள்ள ஒவ்வொருவரின் நோக்கங்களையும் அதில் உள்ள தடைகள் நீங்கி முருகன் அருள் துணைவர நோக்கங்களெல்லாம் நிறைவேறிட காண்பர்.
முருகா என்றால், சத்தியமும் பொதுநலமும் உள்ள ஒவ்வொருவரின் நோக்கங்களையும் அதில் உள்ள தடைகள் நீங்கி முருகன் அருள் துணைவர நோக்கங்களெல்லாம் நிறைவேறிட காண்பர்.
முருகா என்றால், நமது சிந்தையும் தெளிவாய் இருக்கும், செயலும் தூய்மையாய் இருக்கும், சொல்லும் தூய்மையாய் இருக்கும். சிந்தை, செயல், சொல் அனைத்தும் தூய்மையாய் இருக்க முருகப்பெருமான் அருள் துணையாய் இருக்கும் என்பதை அறிந்து தெளியலாம்.
முருகா என்றால், நாம் மேற்கொள்கின்ற அனைத்து செயல்களையும் உண்மையுள்ளதாகவும், பிற உயிர்க்கு எவ்வித தீங்கும் நேரா வண்ணமும், நீதி நெறிக்கு உட்பட்டதாயும் செய்து முடிப்பதோடு செய்யும் செயல்களிலே உள்ள பாவங்களை நீக்கி அனைத்தும் புண்ணிய செயல்களாகவே செய்திட, அந்த ஆதி ஞானசோதி சொரூபன் முருகன் துணைவர அற்புதமாய் செய்து மாபெரும் புண்ணியவான்களாகவே ஆகி முருகன் அருள் கூடிட அருளாளனாகவும் புண்ணியவானாகவும் மாறிடலாம்.
முருகா என்றால், பாவபுண்ணியங்கள் மீது நம்பிக்கையையும் கடவுளின் மீது பக்தியையும் உண்டாக்குவதோடு ஜீவகாருண்யமே ஞானவீட்டின் திறவுகோல் என்பதை உணரச்செய்து பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்து ஜென்மத்தைக் கடைத்தேற்றி கொள்ள வாய்ப்பை அருளி ஜென்மத்தைக் கடைத்தேற்றுவான் முருகப்பெருமான்.