குரு உபதேசம் – 4101
முருகா என்றால், வினை இருக்கும் வரையில் உருகி தியானிக்க முடியாது என்பதை அறியலாம், வினை நீங்க நீங்க உருகி தியானிக்கின்ற அறிவைப் பெறலாம்.
முருகா என்றால், வினை இருக்கும் வரையில் உருகி தியானிக்க முடியாது என்பதை அறியலாம், வினை நீங்க நீங்க உருகி தியானிக்கின்ற அறிவைப் பெறலாம்.
முருகா என்றால், உலகத்தைப் பற்றி அறியக்கூடிய அறிவு எல்லோருக்கும் இருப்பது இயல்புதான். ஆனால் தன்னைப்பற்றி அறிவதே சிறப்பறிவு என்பதை உணர்ந்து தெளிவார்கள்.
முருகா என்றால், ஓடும் நீரான ஆற்றை கடக்கக்கூட கடுமையான பயிற்சியினால் நீச்சலடித்து கடந்து விடலாம். ஆயின் படகினால் சுலபமாக கடந்து விடலாம். ஆனால் நீந்தி கரை சேரமுடியாத பெருங்கடலைக்கூட பெரிய கப்பல்கள் துணையால் கடந்து விடலாம். ஆனால் எல்லையில்லா பிறவிப் பெருங்கடலை கடக்க எந்தஒரு சாதனமும் இல்லை. ஆயினும் எம்பெருமான் முருகனது திருவடித்துணையெனும் தெப்பம் கிடைத்து விட்டால் கடக்க முடியாத பிறவிப் பெருங்கடலையும் எளிதில் கடந்து கரையேறி பிறவாநிலைபெற்று, பெறுதற்கரிய வீடு பேற்றினையும் பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் … Read more
முருகா என்றால், தாய்மை குணம் உள்ள அகத்தீசனை பூசித்தால் எனது ஆசியை பெறுவது எளிது என்பதை முருகனே உணர்த்த உணர்வார்கள். முற்றுப்பெற்ற ஞானியர்கள் தலைவன் திருவடியைப் பற்றிட்டால் யாருக்கும் எட்டா இறைவனாம் முருகனை எளிதினில் எட்டிவிடலாம் என்பதையும் உணரலாம். முருகப்பெருமான் முதல் அகத்தீசன், அருணகிரிநாதன், வள்ளல்பெருமானார், இராமலிங்க சுவாமிகள், மகத்துவம் பொருந்திய மாணிக்கவாசகர், வல்லமை மிக்க திருஞானசம்பந்தன் இன்னும் அநேகம் கோடி ஞானிகள் ஆசிகளைப் பெற விரும்புகின்றவர்கள் கட்டாயம் உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சைவ உணவை … Read more
முருகா என்றால், நிலையில்லாததும், அழியக்கூடியதுமான இந்த உடம்பை பெற்றிருந்தாலும் என்றும் அழிவில்லாததும் அழிக்க முடியாததுமாகியதும் ஆன முருகன் திருவடியை பற்றினால் அன்றி நாம் அழிவற்ற நிலையை அடைய முடியாது என்றும், அழிவில்லாத முருகன் திருவடியைப் பற்றி வெற்றிக் கண்டிட்டால் நாமும் முருகனாக ஆகிவிடலாம் என்பதையும் முருகன் அருளால் உணரலாம். முருகன் ஆசி பெற்ற மக்கள் எந்த செயல் செய்தாலும் அது உயிர்களுக்கு மகிழ்ச்சியை உண்டுபண்ணுவதாக இருக்குமே தவிர உயிர்களுக்கு இடையூறு வருவதாய் அமையாது.
முருகா என்றால், முருகப்பெருமான்தான் ஒரு மனிதனுக்கு வாசி நடத்தி தரவல்ல தகுதியும், ஆற்றலும், அதிகாரமும் கொண்டவனாய் உள்ளான். அவனால் மட்டுமே வாசி நடத்தி கொடுக்க இயலும். வாசி நடத்தும் அதிகாரம் முருகப்பெருமானுக்கு மட்டுமே உண்டு என்று அறிவது சிறப்பறிவாகும். முருகப்பெருமானின் திருவடிகளை பூசித்து ஆசிபெற்ற மக்கள் இனிபிறவா மார்க்கத்தை அடைவார்கள். இவ்வுலகினிலே புண்ணியவான் என்று ஒருவன் இருந்தால் அது முருகப்பெருமானை அன்றி வேறு யாரொருவரையும் சொல்வதற்கு வாய்ப்பில்லை.
முருகா என்றால், தயவே முருகன் என்றும், பக்தியே முருகன் என்றும் அறிந்துவிட்டால் அந்த முருகப்பெருமானே அவனுக்குக் குருநாதனாகி அவனை வழிநடத்தி கடைத்தேற்றுவான் என்பதை அறியலாம்.
முருகா என்றால், முருகனது திருவடியை பூசிக்கப் பூசிக்க உடம்பைப் பற்றியும், உயிரைப் பற்றியும் அறிந்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம்.
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால், மது அருந்துவோர், சூதாடுவோர், உயிர்க்கொலை செய்து புலால் உண்போர், கடன்வாங்கி ஆடம்பரமாக இருப்போர் போன்றவர்கள் பாவத்தின் சின்னமென்றும் உணர்த்துவதோடு அவர்களது நட்பு ஒரு போதும் நமக்கு அமையாமல் காப்பான் முருகன். இது போன்ற தீய பழக்கங்கள் முருகனை வணங்குவோர்க்கு ஒருபோதும் வந்துவிடாமலும் காப்பான் முருகப்பெருமான்.
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால், புண்ணியம் செய்வதற்கும், பக்தி செலுத்துவதற்கும் முருகனே துணையாய் இருந்து வழிநடத்தி நம்மை காப்பாற்றுவான்.