Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 3942

முருகா என்றால், பாவபுண்ணியத்தில் நம்பிக்கையும், கடவுள் நம்பிக்கையும், நாம் முன்செய்த நல்வினையால் வந்தது, மேலும் முருகப்பெருமான் ஆசி துணை கொண்டு பூசை செய்தும் புண்ணியம் செய்தும் ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம் என்பதை உணர்வான்.

குரு உபதேசம் – 3941

முருகா என்றால், ஒவ்வொரு நாளும் நாம் செயல்படுவதற்கான அறிவை முருகன் தயவால் பெறலாம். நன்மை தீமை அறிந்து தீமைவிலக்கி நன்மையை மேற்கொள்ளலாம்.

குரு உபதேசம் – 3940

முருகா என்றால், வினை இருக்கும் வரையில் உருகி தியானிக்க முடியாது என்பதை அறியலாம், வினை நீங்க நீங்க உருகி தியானிக்கின்ற அறிவைப் பெறலாம்.

குரு உபதேசம் – 3939

முருகா என்றால், உலகத்தைப் பற்றி அறியக்கூடிய அறிவு எல்லோருக்கும் இருப்பது இயல்புதான். ஆனால் தன்னைப்பற்றி அறிவதே சிறப்பறிவு என்பதை உணர்ந்து தெளிவார்கள்.