Prasanna
குரு உபதேசம் – 3938
முருகா என்றால் உயிரையும் உடம்பையும் பற்றி அறிகின்ற வாய்ப்பினை பெற்று உடம்பிற்கும் உயிருக்கும் உள்ள தொடர்பினை அறிந்து போற்றுவான் முருகப்பெருமானை.
குரு உபதேசம் – 3937
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… முருகப்பெருமானின் திருவடிகளை உலக மக்கள் எந்த அளவிற்கு வணங்குகிறார்களோ, முருகப்பெருமான் தலைமையை எந்த அளவிற்கு மக்கள் விரைவில் ஏற்கிறார்களோ, முருகப்பெருமானை ஞான ஆட்சி அமைக்க எந்த அளவிற்கு மக்கள் மனம் உருகி அழைக்கின்றார்களோ, அந்த அளவிற்கு முருகப்பெருமான் விரைந்து வெளிப்பட்டு இவ்வுலகினில் ஞானியர் கூட்டம் புடைசூழ தேவாதி தேவரெல்லாம் ஒன்றுகூடிய ஞான ஆட்சியை இவ்வுலகினில் அமைப்பான் என்பதை உணரலாம்.