Prasanna
குரு உபதேசம் – 3936
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. எத்தனைத்தான் ஞானநூல்களை கற்றாலும், கேட்டாலும் பிறர் விளக்கம் சொல்லிட புரிந்து கொள்ள முயற்சித்தாலும், ஞானம் கற்றவர் என கூறிக் கொண்டு மனதில் தோன்றியதெல்லாம் ஞானநூல் விளக்கமாக கூறும் போலிகளின் விளக்கங்களை கேட்டாலும் மெத்த படித்த கல்வியாளர்களின் அற்புதமான மதிமயக்கும் ஞானபேச்சுகளை கேட்டாலும், சரியை, கிரியை, யோகம், ஞானம் நமக்கு அணுவளவும் பிடிபடாது என்பதையும் பரப்பிரம்ம சொரூபியான முருகன் மனம் இரங்கினால்தான் தக்க சொற்குரு மூலமாய் சற்குரு மூலமாய் யோக … Read more
குரு உபதேசம் – 3935
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… தற்காலத்தில் தவறு செய்வோர் தமக்கு உண்டான பணபலத்தாலும், ஆள்பலத்தாலும், செல்வாக்கினாலும் தவற்றின் தண்டனையிலிருந்து தப்புவதோடு, தவறு செய்யவும் அஞ்சுவதில்லை. ஆனால் வருங்காலங்களிலே தவறு செய்தோர், ஞானிகளால் கண்டிப்பாக தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்பதையும் அறியலாம்.
குரு உபதேசம் – 3934
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… புண்ணியங்கள் செய்தால் வறுமை நீங்கும், நோயில்லா வாழ்வு அமையும், ஞானம் பெருகும், செல்வநிலை பெருகும், நோய் நீங்கும், யோகமும் ஞானமும் கைகூடும் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3933
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… ஒரு ஏழைக்கு உணவு தந்தால் கடவுளுக்கே உணவு தந்ததாக அறிகின்ற அறிவும், ஒரு ஏழைக்கு மானம் காக்க தருகின்ற உடை கடவுளுக்கே உடை தந்ததாக அறிகின்ற அறிவைப் பெற்று, எல்லாம் கடவுளால் படைக்கப்பட்டவர்களே என்றும், கடவுளால் படைக்கப்பட்ட உயிர்களுக்கு செய்கின்ற அத்தனையும் கடவுளுக்கு செய்வதாகவே அர்த்தம் என்பதையும் அறியலாம்.