Prasanna
குரு உபதேசம் – 3935
முருகா என்றால், பலபிறவிகளில் செய்த பாவம், வறுமை, நோய், பகை, பொல்லாத காமம் ஆகிய கொடுமைகள் வந்து தாக்கும். அதை வெல்லுதற்கு உபாயம் “ஓம் அகத்தீசாய நம” என்ற மகாமந்திரத்தை குறைந்தது தினம் ஒன்றிற்கு ஆயிரத்தெட்டு முறையாவது ஜெபித்து வர வேண்டும். ஜெபித்து வரவர மெல்லமெல்ல வினைகள் குறையும் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3934
முருகப்பெருமான் திருவடி பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. ஞாயிறு காலை திருவிளக்கு பாராயண பூஜை செய்கின்ற அன்பர்கள் வீட்டில் ஏற்றும் ஜோதியில், எல்லாம் வல்ல ஞானத்தலைவன் அன்பர்தம் பக்தி விசுவாசத்திற்கும், பூஜை பலனிற்கு ஏற்பவும் விரைந்து தோன்றி அருள் செய்வார் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3933
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. தக்க ஆசானின் துணையைப் பெறுவார்கள், ஆன்மீகத்தில் முன்னேறி ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்வார்கள்.