Prasanna
குரு உபதேசம் – 3926
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. ஞானத்தலைவன் முருகப்பெருமானே கடவுள் என்றும், அவனது ஆசியை பெற்றிட்டால், மரணத்தை வென்ற மகான்களான நவகோடி சித்தரிஷி கணங்கள் ஆசியையும் பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம் என்பதையும் அறியலாம்.
குரு உபதேசம் – 3925
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… நாம் காணுகின்ற அனைத்தும் நிலையில்லாதது என்றும், அவை அழியக் கூடியது என்றும், அழியாமல் நிலைப்பது நாம் செய்கின்ற தானதருமங்களும், தர்மத்தலைவன் முருகப்பெருமானின் திருவடி பூஜைகளும் தான் என்பதையும் அறியலாம்.
குரு உபதேசம் – 3924
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… ஆறறிவு படைத்த மனிதன் பிற உயிர்கள் படுகின்ற துன்பத்தை உணர்வதும், அந்த உயிர் படுகின்ற துன்பத்திலிருந்து, அவ்வுயிர்களை காக்கவும் செய்வதே சிறப்பறிவு என்று அறியலாம். அவ்வாறு செய்யாமல் இருப்பதும், உணர முடியாமல் இருப்பதும் அறிவு பெற்றதன் பயன் யாதுமில்லை என்பதை அறியலாம்.