குரு உபதேசம் – 3916
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… என்றும் நிலைப்பெற்று அருளுகின்ற முருகப்பெருமான் திருவடியே உண்மை என்று அறியலாம்.
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… என்றும் நிலைப்பெற்று அருளுகின்ற முருகப்பெருமான் திருவடியே உண்மை என்று அறியலாம்.
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… பசி நீக்கும் எண்ணம் உள்ளவருக்கு முருகப்பெருமானின் ஆசி கிடைக்கும் என்பதை அறியலாம்.
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… இதுநாள் வரையிலும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளிகள் என சமுதாயத்தில் எல்லாவிதமான மக்களும் ஏதேனும் ஒரு வகையில் பாதிக்கப்பட்டு இன்று வரை நொந்து நொந்து சாகிறார்கள். அது ஞானபண்டிதனின் அருளால் இக்காலத்தே ஒரு முடிவிற்கு வரும் என்பதையும் அறியலாம்.
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… இவ்வுலகம் தோன்றியது முதல் இதுவரையிலும் பலபல யுகங்கள் கடந்துள்ள போதும், இனியும் யுகயுகமாக ஞானத்தின் தலைவனாக இருந்து அருள் செய்வது முருகப்பெருமான்தான் என்பதை அறியலாம்.