Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 4091

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால், உலக மக்களே, ஞான ஆட்சி அமைக்க அழையுங்கள் ஆறுமுகப்பெருமானை. முருகனது ஆட்சி பூவுலகினில் ஏற்பட அனைவரும் செய்யுங்கள் சரவணஜோதி வழிபாட்டை, வழிபாடு உலகினில் பெருக பெருக முருகன் ஆட்சி விரைந்து இவ்வுலகினில் அமையும் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் – 4090

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால், முருகப்பெருமானின் நாமங்களை நாமஜெபமாக சொல்லுகின்ற மக்கள் அனைவருமே ஜீவதயவுடையோராக மாறுவார்கள் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் – 4089

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால், தற்காலத்தில் உலகெங்கும் நிகழ்கின்ற பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து உலகமே அமைதி பெறும், பிரச்சனைகளின் காரணமும் பிரச்சனைக்கு காரணமானவர்களும் திருத்தப்பட்டு சீர் செய்யப்படுவதினால் பிரச்சனைகள் தீர்வதுடன் இனி பிரச்சனைகள் வாரா வண்ணம் ஞானிகளால் ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்தப்படும் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் – 4088

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால், முருகப்பெருமானின் ஞான ஆட்சியிலே விலைவாசி கட்டுக்குள் இருக்கும், லஞ்சலாவண்யங்கள் முற்றிலும் ஒழிக்கப்படும், பருவமழை தவறாது பெய்யும், நீதியான சமதர்ம ஆட்சி, நாட்டினில் ஞானிகள் மேற்பார்வையில் நடக்கும், நாடு சுபிட்சமாக இருக்கும், மக்கள் மன அமைதியுடன் எல்லாவளமும் நலமும் பெற்று இன்புற்று வாழ்வார்கள் என்பதை அறியலாம்

குரு உபதேசம் – 4087

முருகப்பெருமான் திருவடி பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால், ஞாயிறு காலை திருவிளக்கு பாராயண பூஜை செய்கின்ற அன்பர்கள் வீட்டில் ஏற்றும் ஜோதியில் எல்லாம் வல்ல ஞானத்தலைவன் அன்பர்தம் பக்தி விசுவாசத்திற்கும் பூஜை பலனிற்கு ஏற்பவும் விரைந்து தோன்றி அருள் செய்வார் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் – 4086

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால், முருகப்பெருமானை வணங்க வணங்க சரியை, கிரியை, யோகம், ஞானம் அனைத்திற்கும் தலைவன் முருகப்பெருமானே என்று உணர்வதோடு பிராணாயாமம் பயிற்சிகளை ஆதிஞானத்தலைவனும் அவர் வழி வந்த ஞானவர்க்கமும் ஓலைச்சுவடிகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அன்பர் தமக்கும் பிராணாயாமப் பயிற்சிகளை அளிப்பான் என்றும், இவ்வுலகினில் வேறெந்த மனிதனாக படித்திட்ட ஆன்மீகவாதிகளுக்கோ, சாதாரண குருமார்களுக்கோ எவ்விதமான வல்லமைகள் இல்லை என்பதையும் அறியலாம்.

குரு உபதேசம் – 4085

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால் சடங்குகளை செய்வதினால் மட்டும் ஒருவர் சித்தி பெற முடியாது என்பதை எவ்வளவு வலியுறுத்தி கூறினாலும் பாவம் செய்திட்ட பாவிகளுக்கு உண்மை ஆன்மீகத்தில் நம்பிக்கை வராது. தாம் செய்வதே சரி எனும் உணர்வே மேலோங்கி நிற்கும். முன் செய்த பாவங்களால் தான் இப்படி நடக்கிறது என்பதை அறிந்து முன்செய்த பாவங்கள் தீர்ந்திட உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து சைவஉணவை மேற்கொள்ள வேண்டும். மாதம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவிக்க வேண்டும். … Read more

குரு உபதேசம் – 4084

முருகப்பெருமான் திருவடிகள் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால், கடல்கொந்தளிப்பு, நிலநடுக்கம், புயல், மிகுதி மழை ஆகியவை முருகப்பெருமானின் ஆசியால் கட்டுப்படுத்தப்படும் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் – 4083

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால், தாய் தந்தையர் இருக்கும்போது அவர்களுக்கு செய்யவேண்டிய கடமைகளை செவ்வனே செய்து தாய் தந்தையரிடம் ஆசிபெறுவதே சிறப்பறிவு என்றும் அதை விட்டுவிட்டு வாழும் போது தாய் தந்தையர்க்கு செய்ய வேண்டிய கடமைகளை சரிவரசெய்யாமல் தாய் தந்தையர் இறந்தபின் அவர்களுக்கு நன்மை செய்கிறேன் என்று அமாவாசை விரதம் இருப்பது போன்ற, இறந்தவர்களுக்கு செய்கின்ற சடங்குகளால் ஆன செயல்களை பேரறிவுடைய ஞானிகள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இருக்கும்போது கடமையை சரிவர செய்யாமல் இறந்தவர்களுக்காக செய்கின்ற அத்துணை … Read more