Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 3912

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… மனிதனாக உள்ளவனுக்கு பலவித துன்பங்கள் இருந்தபோதும், பசித்துன்பமே மனிதனை உடனே நலியச் செய்யக்கூடிய தீராத பெருந்துன்பம் என்பதை அறிகின்ற சிறப்பறிவு உண்டாகும் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் – 3911

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… கைகள் பெற்ற பயனே பிறருக்கு கொடுப்பதுதான். அப்படி பிறருக்கு கொடுப்பதற்காகவே அளிக்கப்பட்ட கைகளை தர்மம் செய்ய பயன்படுத்தாவிட்டால், கைகள் இருந்தும் பயனில்லை என்பதை அறியலாம்.

குரு உபதேசம் – 3910

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… உயிரினங்களிடத்து உள்ள பசியை அறிவதும், அதை நீக்கி அவ்வுயிர்களை இன்பமடைய செய்வதும், அதற்குரிய வாய்ப்பை பெறுவதுமே உயர்ந்த வேள்வி என்றும், பிற உயிர் பசிப்பிணி போக்கி மகிழ்வதே வேள்வியின் பயன் என்பதையும் அறியலாம். வேள்வியின் பயன் ஜீவதயவை தரவல்லதாய் இருக்க வேண்டும். பசிப்பிணியாற்றும் ஜீவதயவு வேள்வியின் பயனால் ஜீவதயவு பெருகி பெருகி, ஜீவதயவே வடிவான முருகப்பெருமானின் ஆசியை முழுமையாகப் பெற்று, பசிப்பிணியாற்றும் வேள்வி செய்வோரை நிலை உயர்த்தி, மும்மலம் நீக்கி … Read more