குரு உபதேசம் – 3907
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… நரை, திரை, மூப்பு, பிணிக்கு ஆட்பட்ட உடம்பை மாற்றி என்றும் அழிவிலாத ஒளி உடம்பைப் பெற்று மரணமிலாத வாழ்வை வாழலாம் என்று அறியலாம்.
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… நரை, திரை, மூப்பு, பிணிக்கு ஆட்பட்ட உடம்பை மாற்றி என்றும் அழிவிலாத ஒளி உடம்பைப் பெற்று மரணமிலாத வாழ்வை வாழலாம் என்று அறியலாம்.
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… முருகப்பெருமானைத் தவிர மற்றோருக்கு வாசி நடத்தித்தரும் அதிகாரம் இல்லை என்பதை அறியலாம்.
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… கற்புடைய பெண்களை கற்பழிப்போர், கலப்படம் செய்வோர், லஞ்சம் வாங்குவோர், அதிகாரத்தின் துணையோடு பண்புள்ள மக்களுக்கு இடையூறு செய்கிறவர்களும், பொது சொத்தை அபகரித்து வாழ்பவரும், அசுரர்களாக கருதப்பட்டு முருகப்பெருமானால் தண்டிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுவார்கள் என்பதை அறியலாம்.
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… உடல் மாசு நீங்கும், உயிர் மாசும் நீங்கும், மனமாசும் நீங்கும், முருகனருளால் உடல் மாசு, உயிர் மாசு, மனமாசு ஆகிய அனைத்தும் நீங்கி தூய்மையான ஒளிஉடம்பையும் பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம் என்று அறியலாம்.