Prasanna
குரு உபதேசம் – 3903
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… முன் ஜென்ம பாவம் ஒழியும் அளவு, தான தருமம் செய்திடல் வேண்டுமென்றும், அதற்குரிய வாய்ப்பும், பொருளும், பெறுவோரும், தருவோரும், உடனிருப்போரும், உதவுவோரும் என்றே அனைத்தும் ஞானத்தலைவன் முருகனை வணங்க வணங்கத்தான் கிடைக்கும் என்றும் அறிவான். எத்துணைப் பொருளிருந்தாலும் தானம் செய்யும் மனநிலை வராதிருப்பதற்கும், நாம் முன் செய்த பாவமே காரணம் என்றும், முருகனை வணங்க வணங்க நம்மிடம் உள்ள லோபித்தனம் நீங்கும் என்றும் அறியலாம்.
குரு உபதேசம் – 3902
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… புண்ணியங்கள் செய்தால் வறுமை நீங்கும், நோயில்லா வாழ்வு அமையும், ஞானம் பெருகும், செல்வநிலை பெருகும், நோய் நீங்கும், யோகமும் ஞானமும் கைகூடும் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3901
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… ஞானநூல் என்பவை ஞானியர் திருவடிகளைப் பற்றி பூஜிக்க தூண்டுவதாயும், ஞானமளிக்க வல்லதாயும் இருக்க வேண்டும். அதுவும் ஞானபண்டிதனது பெருமைகளையும், ஞானபண்டிதன் திருவடிகளைப் பற்ற ஏதுவாய் உள்ள நூல்கள் மிகவும் பயனுள்ளதாகும் என்பதை அறியலாம்.