Prasanna
குரு உபதேசம் – 3893
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… அகத்தீசன் ஆசி பெற்றிட்டால் நோய் இருக்காது, கடன் சுமை இருக்காது, வறுமை இருக்காது, திருடர்களால் இடையூறு வராது என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3892
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… முருகப்பெருமானின் முழுமையான ஆசியைப் பெற, உலக உயிர்களுக்கு தொண்டு செய்தால்தான் முடியும் என்பதையும், உலக உயிர்களுக்கு அயராது தொண்டு செய்தால்தான் உலக உயிர்களின் ஆசியைப் பெற முடியும் என்பதையும் உணர்வார்கள். அப்படி உலக உயிர்களுக்கு தொண்டு செய்யுங் காலத்து வேறெதிலும் நாட்டமாக இல்லாமல் கிடைத்ததைக் கொண்டு திருப்திபடுத்திக் கொள்ளும் மனோநிலையை பெறுவார்கள்.
குரு உபதேசம் – 3891
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… இதுநாள் வரையில் உலக மக்களுக்கு பெரும் பிரச்சனையாக இருந்து வந்த ஜாதி, மத, இன, மொழி, தேச பாகுபாடுகள் முருகனது திருவருட் கருணையினாலே உலக மக்களெல்லாம் உண்மை நிலையுணர்ந்து பேதாபேதமற்று அனைவரும் சகோதரர்கள் என்ற உணர்வையும், மனிதருக்குள்ளே பிறப்பால் உயர்வு தாழ்வில்லை, எல்லோரும் ஓரினம் எல்லா நாடுகளும் முருகனது நாடே, அனைத்து மொழிகளும் முருகனது மொழிகளே, அனைத்து இனமும் முருகனது இனமே எனும் ஒன்றுபட்ட சமுதாய எண்ணம் மேலோங்கி ஒன்றுபட்ட … Read more