Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 4082

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால், இயற்கை சீற்றங்களினாலே எந்தவிதமான இடையூறுகளும் ஆதி ஞானத்தலைவன் முருகப்பெருமானை வணங்குவோர்க்கு வராது என்பதை அறியலாம்.

குரு உபதேசம் – 4081

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராக உள்ள முருகப்பெருமான் அவரவர் செய்த பாவங்களுக்கு ஏற்ப கண்டித்தும் தண்டித்தும், அவரவர் செய்த புண்ணியங்களுக்கு ஏற்ப அருள் செய்தும் காப்பார் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் – 4080

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால், பண்புள்ள மக்களை உருவாக்கி நாட்டைக் காப்பாற்றும் வல்லமை முருகப்பெருமானுக்கு மட்டுமே உண்டு என்பதை அறியலாம்.

குரு உபதேசம் – 4079

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால், ஒரு குடும்பத்தில் ஒருவனுக்கு ஞானம் சித்தித்து விட்டால் ஞானம் சித்தித்தவனுடைய குடும்பத்தில் இருபத்தோரு தலைமுறைக்கு எல்லா நன்மைகளும் உண்டாகும். அவரது குடும்பத்தின் இருபத்தோரு தலைமுறையிலும் நன்மையே நடக்கும் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் – 4078

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால், தர்மத்தின் தலைவன் முருகப்பெருமானை வணங்கி பூஜித்தால், பூஜிக்கின்ற மக்களுக்கு ஒரு போதும் துன்பம் வராது. தர்மம் செய்யும் தர்மவான்களுக்கு இடையூறு வருவது, பெறுவோரின் வினை மிகுதியைத்தான் குறிக்கிறது. கலியுக மாயையுள் ஆட்பட்டும், உயிர்க்கொலை செய்து புலால் உண்போர் தர்மம் ஏற்பதால், கலியுகத்தின் பாவச்சுமை தர்மவான்களை சிறிது துன்புறுத்தினாலும், தர்மவான்களுக்கு எந்த இடையூறும் வாராது, முருகன் காப்பான் என்பதையும் தர்மத்திற்கு வேண்டுமானால் கலியுகத்தில் இடையூறு வரலாம். ஆனால் முருகனை நம்பிய … Read more

குரு உபதேசம் – 4077

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்,அன்னதானத்தில் நம்பிக்கை இல்லாதவர்களும், முருகப்பெருமானின் மீது நம்பிக்கை இல்லாதவர்களும், முருகனை வணங்காதோரும், சைவத்தில் நம்பிக்கை இல்லாதவரும் எவ்வளவுதான் கல்வி கற்ற பெரும் அறிவாளியாக இருந்தாலும், வல்லமைப் பெற்ற செல்வராய் இருந்தாலும் அவர்களை ஒரு பொருட்டாகக்கூட மதிக்க மாட்டான் முருகப்பெருமான் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் – 4076

முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால், சிந்தை, செயல், சொல் ஆகியவை மாசுபடுவதற்கு காரணம் உடல்மாசுதான் என்றும், உடல் மாசு நீங்கினால் சிந்தை, செயல், சொல் ஆகியவையும் தூய்மையாகும் என்பதையும் அறியலாம்.

குரு உபதேசம் – 4075

முருகனை வணங்கிட , மலர்ந்த முகமும், கொடுக்கும் எண்ணமும், இனிமையாக பேசுதலும், தன்னை சார்ந்தோரை புகழ்ந்து பேசுகின்ற பண்பும் உடையோரது நட்பு அமைந்தால், அது நாம் செய்த புண்ணியம் என்றும், அப்படி அமையாவிட்டாலும் பரவாயில்லை, அப்படிப்பட்ட பண்பாளர்களான முதுபெரும் ஞானிகளில் ஒருவரான மகான் திருவள்ளுவரின் திருக்குறளை தினம் இரண்டு அதிகாரமேனும் படித்து தெளிவடைய வேண்டுமென்ற உண்மை ஆன்ம உணர்வை பெற்று, ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்வான்.

குரு உபதேசம் – 4074

முருகா என்றால், குரு என்றாலும் குருநாதன் என்றாலும் அது முருகன்தான் என்பதை அறிய வேண்டும். முருகப்பெருமான் அருளினை பெற விரும்புகின்றவர்கள் உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து சைவ உணவை மேற்கொண்டு சிறந்த முயற்சி உடையோராய் பொருளை ஈட்டி தன்னையும் தனது குடும்பத்தினரையும் சார்ந்தோரையும் காப்பாற்றுவதோடு மட்டுமல்லாது வருகின்ற விருந்தை உபசரித்தும் தன்னை சார்ந்தோர்க்கு பாதுகாப்பாய் இருந்தும், காலை மாலை ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி என்று குறைந்தது பத்து நிமிடமேனும் நாமஜெபமாக சொல்லி மகாமந்திரத்தை உரு ஏற்றி … Read more