Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 3868

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… எல்லா ஞானிகளுக்கும் மூத்தோனும், ஞானவர்க்கத்தின் தலைவனுமாகிய முருகப்பெருமானது நாமங்களை மனம் உருகி “முருகா” என்றோ, “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ, “ஓம் சரவண பவ” என்றோ, “ஓம் சரவணஜோதியே நமோ நம” என்றோ பூஜித்திட்டால், பூசிப்பவர் பஞ்சமா பாவியாகினும் சரி, அவனது பாவங்கள் பொடியாகுவதோடு, முருகன் நாமங்களை சொல்லிய அக்கணமே நவகோடி சித்தரிஷி கணங்களின் பார்வைக்கும் அவன் ஆளாகி ஜென்மத்தைக் கடைத்தேற்றும் மார்க்கமதிலே வந்துவிடுவான்.

குரு உபதேசம் – 3867

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… ஜோதி வழிபாட்டில் மட்டுமே அபிஷேகம் என்ற பெயரிலே உணவுப்பொருளை வீணாக்க தேவையில்லை, மலர்கள் தேவையில்லை, அபிஷேகம் தேவையில்லை, அலங்காரம் தேவையில்லை, பொருள் செலவில்லை, நல்ல நேரம் கெட்ட நேரம் பார்க்க தேவையில்லை, எந்தவொரு சடங்கோ, சம்பிரதாயமோ தேவையில்லை, இப்படி எல்லாவிதத்திலும், எந்த மதத்தினருக்கும், எந்த இனத்தவருக்கும் ஏற்றதும், உருவமற்றதும், கடவுளின் உண்மைநிலையை உணர்த்த வல்லதுமான ஜோதி வழிபாடு மட்டுமே. அதுவே உண்மையும் கூட. கடவுளின் வடிவம் ஜோதி வடிவமே என்பதை … Read more

குரு உபதேசம் – 3865

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து சுத்த சைவ உணவை மேற்கொண்டு தினம் தினம் மறவாமல் முருகனின் நாமங்களை சொல்லி பூஜித்து வருவதோடு, பசித்த ஏழைக்கு பசியாற்றுவித்து வரவர, ஆன்மாவை சுற்றியுள்ள அழிந்து போன அரண், புண்ணியபலத்தால் மீண்டும் வலுப்பெற்று ஆன்மா காக்கப்படும்.

குரு உபதேசம் – 3864

முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : அருந்தவத்தால் மானுடப்பிறவி கிடைத்துள்ளது. அற்புதமான மானுடப் பிறவியின் பெருமையை உணராமல் உயிர்க்கொலை செய்வதும், புலால் உண்பதும், கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருப்பதும், பாவபுண்ணியத்தில் நம்பிக்கை இல்லாமல் இருப்பதும், தக்க விதத்திலே உண்மை ஆசானின் உதவியை நாடாமலும், மனதினில் தோன்றியதெல்லாம் நியாயம் என்றே எண்ணி அடாது பாவம் செய்தால் பாம்பாக, பறவையாக, மிருகமாக பிறந்து நரகத்தில் வீழ்ந்து மாண்டு போவார்கள். ஒருமுறை “முருகா” என்று சொன்னால் மானுடப் பிறப்பின் பெருமையை உணர்ந்து … Read more