Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 3856

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. பொருள் பற்று இருக்காது, ஏழைகள்பால் கருணை உண்டாகும், நாட்டில் ஜீவதயவு பெருகிடும், நாட்டில் பருவமழை தவறாது பெய்து நாடும் செழிப்படையும் என்பதையும் முருகப்பெருமானின் ஆசியினால் நாடு செழிக்கும் என்பதையும் அறியலாம்.

குரு உபதேசம் – 3855

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. உயிர்க்கொலை செய்து புலால் உண்பது பாவம் என்பதும், அன்னதானம் செய்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளும் அறிவும், அதற்குரிய சூழ்நிலையும் உருவாகும்.

குரு உபதேசம் – 3854

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. தயவே வடிவான முருகனின் திருவடியை பற்றினால் அன்றி முருகனிடத்தும் ஆசியை பெற முடியாது, ஞானிகளிடத்தும் ஆசியை பெற முடியாது, ஞானமும் சித்திக்காது, ஜீவதயவே வடிவான முருகனது ஆசியைப் பெற வேண்டுமெனில் ஜீவர்களுக்கு இரங்கி இதம் புரிந்தால் அன்றி முருகனின் அருளைப் பெற முடியாது என்பதை அறியலாம்.

குரு உபதேசம் – 3853

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. ஞானமே வடிவானவனும் ஞானத்தலைவனும், ஆயிரம் தாய்க்கு ஒப்பான தாயன்பு உடையவனும், கருணையின் சொரூபமாய், தயவின் ஒளி ரூபமாய் எல்லையில்லா பேராற்றல் கொண்ட முருகனை முதல் தெய்வமாக ஏற்று நம்பிக்கையோடு வழிபட்டு வருவோர் தம்மை ஒருபோதும் முருகப்பெருமான் கைவிட்டதில்லை என்பதை அறியலாம்.