குரு உபதேசம் – 3852
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. கருணையே வடிவான முருகப்பெருமானின் கருணையை பெற்றாலன்றி, கருணை உணர்வும், தயவின் தன்மையையும், தருமசிந்தையும் வாராது. முருகனது அருளைப் பெற்றால் தருமம் பெருகும், தருமம் பெருகினால்தான் நாடு செழிக்கும் என்றும், முருகனே உலகின் வளத்திற்கும், நலத்திற்கும் ஆதாரமாக இருக்கின்றான் என்பதையும் அறியலாம்.