Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 4073

முருகா என்றால், பலஜென்மங்களில் செய்த பாவங்கள் மது அருந்துதல், புலால் உண்ணுதல், மற்ற உயிர்களுக்கு இடையூறு செய்து மகிழ்ச்சியடைதல் ஆகிய குணக்கேடுகளே பொல்லா நரகத்தில் நம்மை தள்ளி விடும் என்பதை அறிந்து கொள்ளலாம். பொல்லா நரகத்திலிருந்து விடுபட வேண்டுமென்றால் உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, வீரசைவ உணவை உண்டும், காலை மாலை “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்று குறைந்தது ஆயிரத்தெட்டு முறையேனும் மகாமந்திரத்தை ஜெபித்து வரவேண்டும். மாதம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவிக்க வேண்டும். வாய்ப்பு … Read more

குரு உபதேசம் – 4072

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால், கோடானுகோடி யுகம் தவம் செய்து வெற்றி கண்ட வேலவனே இவ்வுலகை ஆட்சி செய்ய வருகின்றான் என்றால் அது மகிழ்ச்சிக்குரிய விஷயம்தான் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் – 4071

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால், உலகத்தில் சென்ற காலம், வருங்காலம், நிகழ் காலம் என்கிற முக்காலமும் உணர்ந்த முருகப்பெருமான் பிரச்சனைகள் உருவாவதற்கு முன்னரே, உணர்ந்து பிரச்சனைகள் வருவதற்கு முன்பே தீர்த்து விடுவான் முருகப்பெருமான் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் – 4070

முருகா என்றால், எந்தெந்த வகைகளிலே நமக்கு பாவங்கள் சூழும் என்பதை உணர்த்தி பாவங்கள் நம்மை சூழாமல் தடுத்து ஆட்கொள்வார் முருகப்பெருமான். காமத்தால், கோபத்தால், பொருள்பற்றால், யான் என்ற கர்வத்தால், அதிகார பலத்தால், ஆள்பலத்தினால் செய்த பாவங்களை உணரச் செய்து மேலும் பாவங்களை செய்யாதிருக்க அருள் செய்வான் முருகப்பெருமான்.

குரு உபதேசம் – 4067

முருகப்பெருமான் திருவடிப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால், பந்தபாசம் அற்றவரும், கேட்பதெல்லாம் தரக்கூடிய மகா ஆற்றல் பொருந்திய ஞானத்தலைவன் முருகப்பெருமான் திருவடிகளை மனம் உருகி பூஜிக்கும் மக்களுக்கு எந்த குறையும் வராது.

குரு உபதேசம் – 4066

முருகப்பெருமான் திருவடிகளை பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால், பெறுதற்கரிய மனிதப் பிறவியைப் பெற்றவர்கள் புண்ணிய பலத்தை பெற்றும் முருகனது அருளை முழுமையாகப் பெற்றும் இனி பிறவா மார்க்கமாகிய மரணமிலாப் பெருவாழ்வை அடையலாம் என்பதை அறியலாம். முருகனது ஆசியைப் பெற உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொண்டும் வருவதோடு, எந்த அளவிற்கு பிற உயிர்களுக்கு உதவி செய்கின்றோமோ அந்த அளவிற்கு ஜீவதயவு பெருக்கம் அடையுமென்றும், எந்த அளவிற்கு உயிர்கள் மகிழ்வுறுகிறதோ அந்த அளவிற்கு அறிவு … Read more

குரு உபதேசம் – 4065

முருகா என்றால், முக்திக்கு வித்தகன் முருகப்பெருமான் என்று அறிகின்ற சிறப்பறிவைப் பெறலாம்.

குரு உபதேசம் – 4064

முருகப்பெருமான் திருவடி பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால், ஞாயிறு காலை திருவிளக்கு பாராயண பூஜை செய்கின்ற அன்பர்கள் வீட்டில் ஏற்றும் ஜோதியில் எல்லாம் வல்ல ஞானத்தலைவன் அன்பர்தம் பக்தி விசுவாசத்திற்கும் பூஜை பலனிற்கு ஏற்பவும் விரைந்து தோன்றி அருள் செய்வார் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் – 4063

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால், கருணையே வடிவான முருகப்பெருமானின் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால் புலால் உண்ணும் பழக்கம் கசந்து போகும். பொருளின் மீது உள்ள பற்று அற்றுப்போகும். ஏழைகள்பால் கருணை உண்டாகும் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் – 4062

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால், எல்லாம் வல்லவனும் ஞானமே வடிவானவனும் ஆகிய முருகப்பெருமான் இவ்வுலகை ஆட்சி செய்கின்றபடியினால் ஒரு நொடிக்குள் ஓராயிரம் பிரச்சனைகளுக்கு அலசி ஆராய்ந்து தீர்வு காண்பான் என்பதும் அவனது முடிவுகளை வழிநடத்திட எண்ணிலா கோடி சித்தரிஷி கணங்களும் உடன் துணைவர இவ்வுலகம் இனிதே ஞானஉலகமாக மாறிடும் என்பதையும் அறியலாம்.