Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 3840

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. எவர் ஒருவர் முருகப்பெருமானின் திருவடிகளைப் பற்றி மனம் உருகி பூஜைகள் செய்து ஆசி பெறுகிறார்களோ, அவர்களுக்கு சரியை, கிரியை, யோகம், ஞானம் அனைத்தும் உணர்த்தப்படும். ஆதலின் முருகப்பெருமானை வணங்கியவர்க்கு முருகப்பெருமானின் அருட்கடாட்சத்தினால் பணத்திற்காக யோகம் கற்பிக்கும் பொய்தவ வேடதாரிகளிடம் சென்று ஏமாந்து போகவும் மாட்டார்கள். தகுதியற்ற வகையிலே யோகம் செய்து உடம்பை வீணாக்கி செத்துப் போகமாட்டார்கள், யோகமும் ஞானமும் முருகன் அருளாலன்றி வாய்க்காது என்பதும், யோகமும் ஞானமும் பக்தியினாலும், … Read more

குரு உபதேசம் – 3839

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. முருகப்பெருமானின் கருணையில்லாமல், அருள் இல்லாமல், ஆசி இல்லாமல், அவனது துணை இல்லாமல் சத்தியமாக மனிதபிறவியின் துயரம் நீங்காது. நீங்கா துன்பமாகிய பிறவித் துன்பத்திலிருந்து விடுபட முடியாது என்பதும், முருகனது கருணையை முழுமையாக பெற்றால் மரணத்தை வென்று மரணமிலாப் பெருவாழ்வை பெறலாம் என்பதையும் அறியலாம்.

குரு உபதேசம் – 3838

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. மக்கள் அறிந்து ஏமாந்தாலும், அறியாமல் ஏமாந்தாலும், மக்களுக்கு தெரிந்து ஏமாற்றினாலும், தெரியாமல் ஏமாற்றினாலும் சரி, மக்களை ஏமாற்றி அரசியல் பெயரால், ஆன்மீகத்தின் பெயரால், கடவுள் பெயரால் மற்றும் லஞ்சலாவண்யங்களாய் என எவ்விதத்தில் ஏமாற்றி சேர்த்தாலும் சரி, அது பாவம் என்பதை உணர்ந்து மக்களுக்கு செலவு செய்து தாம் செய்த பாவத்திற்கு பரிகாரம் தேடிக் கொள்ள வேண்டும் என்பதும் அவ்வாறு செய்யாமல் தமது திறமையாய், அறிவாய், தமது ஆற்றலாய் எண்ணி … Read more

குரு உபதேசம் – 3837

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. வரும் காலம் ஞானசித்தர் காலம்தான் என்பதும், ஞானசித்தர்கள் காலத்தினிலே முருகப்பெருமானே தலைமையேற்று இவ்வுலகை ஆட்சி செய்ய போகிறான் என்பதும் உணர்த்தப்படும். ஞானிகள் ஆட்சியிலே பங்கு கொள்ள தன்னலமற்ற சேவையும், பொதுநோக்கும், பொருள்பற்று அற்றவராய், காமுகனாய் இல்லாதிருத்தல், பேராசையற்றவராய், உணவு, உடை, இருப்பிடம், மருத்துவம், வாகன வசதி என அடிப்படை வசதிகளைப் பெற்று நாட்டுநலனிற்காக பாடுபடுபவர்கள் மூலமாகத்தான் ஆட்சி நடக்கும் என்பதையும் அறியலாம்.