Prasanna
குரு உபதேசம் – 3823
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. மனிதர்கள் ஆட்சியிலே ஆன்மீகவாதி உண்மையாய் பொருள்பற்று அற்றவர்களாய் நடக்காமல், பொருள் பற்று கொண்டு தம்மை நோக்கி வரும் இல்லறத்தானை ஏமாற்றி பொருளை பறிக்கின்றார்கள். இனி வரப்போகும் முருகப்பெருமானின் ஞான ஆட்சியிலே ஏமாற்ற நினைத்தாலே தண்டனை பெறுவர். அதுவும் கடவுள் பெயரால் ஏமாற்ற நினைத்தால் முருகப்பெருமானால் தண்டிக்கப்படுவார்கள் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3819
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. மனிதர்கள் ஆட்சியிலே ஆட்சி பொறுப்பில் உள்ளோர் தினமும் முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்தால் கேட்டதெல்லாம் தரும் முருகனது அருளாலே எக்காலத்தும் துன்பமில்லாத வாழ்வை வாழலாம்.
குரு உபதேசம் – 3818
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. உலக மக்களெல்லாம் எந்த மதமாயினும், எந்த நாடாயினும், எந்த இனமாயினும், எந்த மொழியாயினும் சரி, அவர் முருகா என அழைத்து விட்டால் அக்கணமே முருகனது நாமங்கள் சொன்ன அவர்தம் அழைப்பினை ஏற்று அருள் செய்வான் வல்லமைமிக்க முருகப்பெருமான். அன்பர் அழைப்பிற்கு இணங்கி அருளும் முருகனை மக்கள் அன்புடன் அழைத்தால் எவராலும் எந்த சக்தியாலும் கட்டுப்படுத்த முடியாத இயற்கை சீற்றத்தையும் நொடிப்பொழுதில் கட்டுப்படுத்தி இவ்வுலகை காப்பான் ஐந்தொழில் வல்ல அற்புத … Read more
குரு உபதேசம் – 3817
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. எல்லா தரப்பினரும், எல்லா மட்டத்தில் உள்ளவரும் எந்த குறையும் இன்றி நலமுடன் வளமுடன் நீதிநெறிப்படி வாழும் வாய்ப்பை பெற்று, அமைதியான இனிமையான பண்பான வாழ்வை மனநிறைவோடு வாழ்வார்கள் என்பதை அறியலாம்.