Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 3813

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. முருகப்பெருமானால் படைக்கப்பட்ட உயிர்களுக்கு எவர் உண்ண உணவும், உடுக்க உடையும், நோய் துன்பம் தீர்க்க மருத்துவமும், தங்கி வாழ இடமும் தந்து, கல்வியும் தந்து, ஜீவதயவுடையோராய் நடந்து கொள்கிறாரோ, அவரே முருகப்பெருமானால் அங்கீகரிக்கப்பட்ட உண்மை ஆன்மீகவாதியாவான். ஜீவதயவற்றவன் எவ்வளவு பெரிய செல்வந்தராக இருந்தாலும் ஆயிரம் ஆயிரம் அறநூல்களை கற்றவனாயினும், இனிமையாக பேசி மக்களை கவரும் உரையாற்றுபவனாயினும் சரி, அவரெல்லாம் போலி ஆன்மீகவாதிகளேயாவார் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் – 3812

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. முருகப்பெருமான் தலைமையில் நடக்கின்ற ஞானஆட்சியிலே சகலருக்கும் சகல நன்மைகளும் உண்டாகும் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் – 3811

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. கருணையே வடிவான ஞானபண்டிதன் முருகப்பெருமானின் தலைமையிலே நடக்கின்ற ஞானஆட்சி காலமானது பொற்காலமாகும். ஏழை எளியோர் மகிழ்வுடன் வாழ்வர், மிகுமழை இருக்காது, மிகுதி வறட்சியும் இருக்காது என்பதை அறியலாம்.