Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 4061

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால், எவர் ஒருவர் முருகப்பெருமானின் திருவடிகளைப் பற்றி மனம் உருகி பூஜைகள் செய்து ஆசி பெறுகிறார்களோ, அவர்களுக்கு சரியை, கிரியை, யோகம், ஞானம் அனைத்தும் உணர்த்தப்படும். ஆதலின் முருகப்பெருமானை வணங்கியவர்க்கு முருகப்பெருமானின் அருட்கடாட்சத்தினால் பணத்திற்காக யோகம் கற்பிக்கும் பொய்தவ வேடதாரிகளிடம் சென்று ஏமாந்து போகவும் மாட்டார்கள். தகுதியற்ற வகையிலே யோகம் செய்து உடம்பை வீணாக்கி செத்துப் போகமாட்டார்கள், யோகமும் ஞானமும் முருகன் அருளாலன்றி வாய்க்காது என்பதும், யோகமும் ஞானமும் பக்தியினாலும், … Read more

குரு உபதேசம் – 4060

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால், எல்லாவற்றையும் நொடியில் ஆராய்ந்து நிலையான முடிவை சிறப்பாக எடுத்து ஆட்சி செய்திடுவார்கள் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் – 4059

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால், ஞானத்தலைவன் முருகப்பெருமானை மனம் உருகி வணங்கினால் மட்டுமே, தன்னால் பாதிக்கப்படும் ஏழைகள் படும் துன்பத்தை உணர்வார்கள், உணர்ந்து ஏழைகள் விடும் சாபத்திலிருந்து தப்பித்து கொள்வார்கள், பிறரை வருத்தியதால் உண்டாகும் துன்பத்திலிருந்தும் விடுபடலாம்.

குரு உபதேசம் – 4058

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால், நிலையில்லாத வாழ்வைப் பெற்ற நாம் அறப்பணிகள் செய்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள வேண்டும் எனும் சிறப்பறிவை பெறலாம்.

குரு உபதேசம் – 4057

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால், உயிர்க்கொலை செய்து புலால் உண்பது பாவம் என்பதும், உயிர்க்கொலை செய்யக் கூடாது என்பதையும் ஜீவதயவினை தரவல்லதான அன்னதானம் செய்ய வாய்ப்பையும் பெறுவதோடு, பாவசுமையிலிருந்து மீண்டு இயற்கை சீற்றங்களினால் ஏற்படுகின்ற பாதிப்பிலிருந்து தப்பித்தும் கொள்ளலாம், இயற்கை சீற்றம் ஏற்படாதவாறும் காக்கலாம். சைவத்தை கடைப்பிடிப்போர் மிகுதி ஆகஆக இயற்கை சீற்றம் இருக்காது, பருவமழை சீராக பெய்யும், நிலநடுக்கம் வராது, பூகம்பம் உண்டாகாது என்பதை அறிவதோடு முருகனது அருளை பெற்றால்தான் இவையனைத்தையும் அறிய … Read more

குரு உபதேசம் – 4056

முருகனை வணங்கிட, மனம், வாக்கு, காயத்தால் செய்த பாவங்களை உணரச் செய்தும் மீண்டும் அதுபோன்ற குற்றங்கள் ஏற்படாவண்ணம் நம்மைக் காப்பாற்றிக் கொள்ளக்கூடிய அறிவைப் பெறலாம்.

குரு உபதேசம் – 4055

முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால், பால பருவம், வாலிப பருவம், முதுமைப் பருவம் ஆகிய மூன்று நிலைகளும் உண்டாகி இறுதியில் அனைத்தும் அழிந்து போவதும் இயற்கையால் வந்தது என்றும், இயற்கையால் விதிக்கப்பட்ட இந்த பருவங்களை கடந்து மாற்றி, என்றும் மாறாத அழிவில்லாத இளமைப் பருவத்தை அடையலாம் என்பதையும் அதுவே மரணமிலாப் பெருவாழ்வாகிய பெருநிலை என்பதையும், அதை தவ முயற்சியால், தயவின் துணையால் அடையலாம் என்பதையும் முதன் முதலில் முருகப்பெருமான் தான், இத்தவத்தை கண்டு பிடித்தார் என்பதையும் அறியலாம். … Read more

குரு உபதேசம் – 4054

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால், உலகையே காக்கும் வல்லமை பெற்ற முருகப்பெருமான் அன்பர் அன்போடு மனம் உருகி அழைத்தால் அக்கணமே தோன்றி அஞ்சேல் யாமிருக்க பயம் ஏன்? என்று அருள் செய்யும் வல்லமை பெற்றவன். முருகப்பெருமான் தோன்றி அருள் செய்ய வேண்டுமாயின் அன்பர்கள் தினமும் காலை பத்து நிமிடமும், மாலை பத்து நிமிடமும், இரவு பத்து நிமிடமும் ஒரு தீபமேற்றி வணங்கி ஓம் முருகா என்றோ ஓம் சரவணபவ என்றோ, ஓம் முருகப்பெருமான் திருவடிகள் … Read more

குரு உபதேசம் – 4053

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால், பக்தர்களுக்கும், பண்புடையோர்க்கும், பத்தினி பெண்களுக்கும், யோகிகளுக்கும், நீதிநெறி நிற்போர்க்கும் எந்த பிரச்சனைகள் ஏற்பட்டாலும், நொடிப்பொழுதில் முருகப்பெருமான் வெளிப்பட்டு அவர்களது பிரச்சனைகளை தீர்த்து வைப்பான் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் – 4052

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால், கலப்படம் செய்தல், பொது சொத்துகளை நாசப்படுத்துதல், பொது சொத்தை அபகரித்தல், லஞ்சம் வாங்குதல், அதிக வட்டி வாங்குதல் எனும் மகா கொடிய அசுரச் செயல்களை செய்கின்ற அசுரர்களை வதம் செய்து அவர்களிடமிருந்து இவ்வுலகை காத்து அமைதியான உலகமாக ஞானஉலகமாக அசுர உலகை மாற்றி அமைத்து சமநீதி, சமதர்மம், சமநோக்கு உடைய உலகமாக இவ்வுலகை அமைத்திடவே முருகப்பெருமான் அவதரித்துள்ளான் என்பதை அறியலாம். வெகுவிரைவில் இவ்வுலகம் சமநிலை பெறும் என்பதையும் அறியலாம்.