Prasanna
குரு உபதேசம் – 3792
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… கருணைக்கு தலைவனான கந்தபெருமானே இனி இவ்வுலகை ஆட்சிசெய்ய இருப்பதால், கந்தபெருமானின் தலைமைக்கு கீழ் தொண்டாற்றும் தொண்டர்கள், தன்னை அர்ப்பணிக்கும் தகைமை பெற்றவர்களாக இருப்பார்கள்.
குரு உபதேசம் – 3791
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… விலைவாசி ஏற்றம், கலப்படம், லஞ்சலாவண்யம், கொள்ளை, கொலை, கற்பழிப்பு போன்ற கொடுமைகளை முருகப்பெருமான் கட்டுப்படுத்தி நல்லோரையும் பண்புடையோரையும் பாதுகாப்பான் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3790
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… முருகப்பெருமானின் ஞான ஆட்சியிலே விலைவாசி கட்டுக்குள் இருக்கும், லஞ்சலாவண்யங்கள் முற்றிலும் ஒழிக்கப்படும், பருவமழை தவறாது பெய்யும், நீதியான சமதர்ம ஆட்சி, நாட்டினில் ஞானிகள் மேற்பார்வையில் நடக்கும், நாடு சுபிட்சமாக இருக்கும், மக்கள் மன அமைதியுடன் எல்லாவளமும் நலமும் பெற்று இன்புற்று வாழ்வார்கள் என்பதை அறியலாம்
குரு உபதேசம் – 3789
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… பந்தபாசம் அற்றவராகவும், பொருள்பற்று அற்றவராகவும், ஜாதி மத பாகுபாடு அற்றவர்களாகவும், உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொள்பவராகவும் தினம் தினம் மறவாமல் “ஓம் முருகா” என்றோ “ஓம் சரவணபவ” என்றோ “ஓம் சரவணஜோதியே நமோ நம” என்றே நாமங்களை அவசியம் ஜெபிப்பவராகவும், தம் கையால் வாரம் ஒருமுறையேனும் அன்னதானம் செய்பவராகவும் உள்ள தொண்டுள்ளம் கொண்ட மக்களே ஆட்சிப் பொறுப்பில் அமர்வார்கள் என்பதை அறியலாம்.