Prasanna
குரு உபதேசம் – 3784
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. உயிர்க்கொலை செய்து புலால் உண்பது பாவச்செயல் என்பதை அறியச் செய்தும், சுத்த சைவ உணவை கடைப்பிடிக்க அருள் செய்தும், அன்னதானம் செய்வதற்குரிய அறிவைத் தந்தும், அன்னதானம் செய்வதற்குரிய பொருளுதவிகளைச் செய்தும் அதற்குரிய இடம், பொருள், ஏவல், ஆட்படை என அனைத்தையும் தருவதோடு தானம் பெறுகின்ற பஞ்சபராரிகளையும் அவனே அருளிச் செய்து, எல்லாம் அவனது செயலாய் ஆக்கி நம்மை புண்ணியவான்களாக ஆக்குவான் முருகப்பெருமான் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3783
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. கோடானுகோடி ஆற்றல் பெற்ற முருகப்பெருமானை ஜோதி ஏற்றி முருகப்பெருமான் நாமங்களை சொல்லி மனம் உருகி வழிபட்டு விட்டால், இதன்முன் பல ஜென்மங்களிலே செய்த பாவங்கள் தீரும், வறுமை தீரும், செல்வம் பெருகும், தயைசிந்தை உண்டாகும், பாவம் நீங்கி எல்லா நன்மைகளும் அவர்தம்மை தானே தேடி வரும் முருகன் அருளால்.
குரு உபதேசம் – 3782
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. தயவே வடிவான முருகப்பெருமானே நேரில் தோன்றி உலகப் பெருமாற்றம்தனை நிகழ்த்தி உலகை தலைமைதாங்கி நடத்த இருப்பதால் முருகனது ஆட்சியிலே ஜாதி, மதம், இனம், மொழி, தேசம் என்கிற எந்த பாகுபாட்டாலும் வன்கொடுமைகளும், உயிர்சேதங்களும் எற்படாது என்றும், இந்த பேதா பேதங்களெல்லாம் முருகன் அருளால் முற்றிலும் உலகினில் வழக்கொழிந்து போய்விடும் என்பதை அறியலாம்..