Prasanna
குரு உபதேசம் – 3781
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. இப்படிப்பட்ட இழிபிறவியை அடைந்து விடக் கூடாது என்ற சிறப்பறிவு உண்டாவதோடு, தானதருமங்களை செய்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளும் நல்ல மனதும் உயிர்கள்பால் இரக்கம் உண்டாகி ஜீவதயவு பெருகி அன்னதானம் செய்கின்ற உணர்வும் வரும். அதற்குரிய அறிவும் பரிபக்குவமும் செல்வமும் முருகப்பெருமான் திருவருளால் கிடைத்திடும். தானமும் தவமும் செய்து ஜென்மத்தைக் கடைத்தேற்றும் வாய்ப்பையும் பெறலாம்..
குரு உபதேசம் – 3780
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. முக்காலத்தையும் உணர்ந்த ஞானிகள் ஆட்சியிலே லஞ்சம், கலப்படம், இயற்கை சீற்றம், மிகுதி மழை, மழையற்ற நிலை இவையெல்லாம் மாறி எல்லாம் சீராகி மக்கள் முருகப்பெருமானின் ஆற்றலினால் காப்பாற்றப்படுவார்கள் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3779
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. ஜாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் உலகில் நடக்கின்ற அநீதிகளை அழித்து ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற நிலை முருகனது தலைமையிலே இவ்வுலகிலே உண்டாகும். தற்காலத்தில் சடங்குகளால் நடைபெறும் மூடத்தனமான வழிபாடுகளெல்லாம் மாறி இனி உண்மை வழிபாடாம் கடவுளின் உண்மை நிலையை குறிக்கும் ஜோதி வழிபாடே ஜாதி, மத, இன, மொழி கடந்து பொது வழிபாடாய் உலகமெலாம் ஏற்றுக் கொள்ளப்பட்டு எல்லோராலும் பின்பற்றப்படும் என்பதை அறியலாம். இந்தவித கொள்கையை … Read more