Prasanna
குரு உபதேசம் – 3762
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. முருகப்பெருமான் திருவடிகளை வணங்க வணங்க முரண்பட்ட இயற்கையும் மாறி இயல்பாய் பருவமழை தவறாது பெய்து நாடு செழிக்கும், மக்கள் அமைதியுடன் வாழ்வார்கள், எல்லா ஜீவன்களும் கருணையே வடிவான முருகனது அருளால் காக்கப்படும் என்பதையும் அறியலாம்.
குரு உபதேசம் – 3760
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. பாவவினைகளை போக்கி நம்மை கடைத்தேற்றும் தலைவனே முருகன் என்பதையும் முருகனது அருளாசியை பெற்றிட்டால் எல்லா தீயபழக்கங்களிலிருந்தும் விடுபடுவதோடு தொடர்ந்து பூஜைகள் செய்தும், புண்ணியச் செயல்களை செய்தும் வரவர, முருகனது கருணையாலே அருளாளனாய், புண்ணியவானாய் நாமும் மாறி ஞானமும் பெறலாம் என்பதையும் அறியலாம்.