குரு உபதேசம் – 4051
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால், துன்பப்படுகின்ற அடியார்கள் முருகனை நினைத்த அக்கணமே தோன்றி, அழைத்த அடியார்களின் துன்பத்தைப் போக்கி அருள்வான் முருகப்பெருமான் என்பதை அறியலாம்.

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால், சைவத்தை மேற்கொண்டு அன்னதானம் செய்து முருகனது திருவடிகளைப் பற்றி பூஜிக்கின்ற மக்களுக்குத்தான் ஞானசித்தர் காலத்திலே அரசின் பதவிகளில் அமரும் வாய்ப்பை பெறலாம் என்பதை அறியலாம்.
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால், அறம், பொருள், இன்பம், வீடுபேற்றிற்கு தலைவனான முருகப்பெருமான் திருவடிகளை பூஜிக்க பூஜிக்க இளமை நிலையாமை, உடம்பு நிலையாமை, செல்வம் நிலையாமை ஆகியவற்றை அறியச்செய்தும் இதற்கு காரணமாய் இருக்கக்கூடிய தூல தேகத்தையும், சூட்சும தேகத்தையும் அறியச்செய்து அதாவது புறஉடம்பையும், அகஉடம்பையும் அறியச் செய்து, தூல தேகத்தினில் உள்ள காமவிகாரத்தை நீத்து போகச்செய்து சூட்சும தேகமாகிய ஒளிதேகத்தை பெற அருள்செய்வான் முருகன் என்பதையும் அறியலாம்.