Prasanna
குரு உபதேசம் – 3755
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. எல்லா பாவங்களையும் உணரச் செய்தும், அப்பாவங்களினால் விளைந்த வினைகளை அனுபவிக்க செய்தும் பின் வினையற்ற, வினைகள் சேராத வாழ்வை அருளுவான் முருகப்பெருமான்.
குரு உபதேசம் – 3750
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. முருகப்பெருமானின் தலைமையிலே நடக்கின்ற ஞானஆட்சியிலே இயற்கை கட்டுப்படும், பருவமாற்றங்கள் ஒழுங்காய் நடந்து பருவமழை தவறாது பெய்வதோடு இயற்கை சீற்றமில்லாத பசுமையான இனிமையான வாழ்வை மக்கள் வாழ்ந்து சிறப்பார்கள் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3749
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. பிற உயிர்களுக்கு இரக்கம் காட்டி அவைகளுக்கு உணவளித்து, ஆறுதல் செய்து, பிற உயிர்படும் துன்பத்தை போக்கி அவைகளை மகிழ்வுற செய்து தானும் மகிழ்வதே, மனதை மகிழச் செய்வதும், பொழுது போக்குச் செயலும் ஆகும். பொழுது போக்கு என்பது பொழுதினை நற்பொழுதாய் போக்குவதாய் இருக்க வேண்டும். பிற உயிர் துன்பப்படுவதை கண்டு ரசிப்பது பெரும் பாவம் என்றும் அப்படிப்பட்ட செயல்களுக்கு ஒரு போதும் ஆதரவு தரக்கூடாது என்றும் அச்செயல்கள் முருகனருளால் … Read more