Prasanna
குரு உபதேசம் – 3744
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. இனிவரும் காலங்களிலே வெகு விரைவினிலே முருகப்பெருமான் வெளிப்பட்டு உலக மக்களை காப்பாற்றுவான் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3743
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. கோடானு கோடி யுகங்கள் தவமாய் தவமிருந்து முற்றுப்பெற்ற முருகப்பெருமான் கருணையே வடிவானவர். எத்தகைய கொடும் பாவிகளையும் மன்னித்து அருள்செய்யும் தயவே வடிவான தனிப்பெரும் தெய்வம், ஆனால் இக்கலிகாலத்தினில் நடந்துள்ள கொடுமைகளை கண்டு தயவுடை தனிப்பெரும் தெய்வம் முருகப்பெருமானே பொறுக்க முடியாமல் கொடுமைகளை களைய முருகனே அவதாரமாக நேரில் தோன்றி கொடுமைகளை கட்டுப்படுத்த துவங்கி விட்டான் என்பதையும் அறியலாம்.
குரு உபதேசம் – 3742
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. இதுநாள் வரையிலும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளிகள் என சமுதாயத்தில் எல்லாவிதமான மக்களும் ஏதேனும் ஒரு வகையில் பாதிக்கப்பட்டு இன்று வரை நொந்து நொந்து சாகிறார்கள். அது ஞானபண்டிதனின் அருளால் இக்காலத்தே ஒரு முடிவிற்கு வரும் என்பதையும் அறியலாம்.