Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 3738

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…  இல்லறம், துறவறம், ஞானம் என மனிதனின் அனைத்து வாழ்வியல் நெறிமுறைகளுக்கும் தலைவன் முருகனே என்பதை அறியலாம். முருகனது அருளினால்தான் இந்த மூன்றில் எந்த ஒரு நெறியை மேற்கொண்டாலும் பாதுகாப்பாய் செல்ல முடியும் என்பதையும் அறியலாம்.

குரு உபதேசம் – 3737

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…  இதுநாள் வரையிலும் அவரவர் மனதிற்கு தோன்றியபடி சிறுதெய்வங்களை வழிபட்டதினால் மனிதருக்குள்ளே ஜாதிகளும், மதங்களும் தோன்றின. இனிவரும் காலங்களில் சிறுதெய்வ வழிபாடு அற்றுப்போய் ஜோதி வழிபாடே ஏற்றுக் கொள்ளப்பட்டு உலகமே மாறி “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்கிற கொள்கை உண்டாகும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

குரு உபதேசம் – 3736

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…  மரணமிலாப் பெருவாழ்வு என்ற பிறப்பு இறப்பற்ற நிலை ஒன்று உண்டென்றும், மோட்ச லாபம் என்ற நிலையும் உண்டென்றும் அறியலாம்.