குரு உபதேசம் – 417
முருகா என்றால், பாவபுண்ணியத்தில் நம்பிக்கையும், கடவுள் நம்பிக்கையும், நாம் முன்செய்த நல்வினையால் வந்தது, மேலும் முருகப்பெருமான் ஆசி துணை கொண்டு பூசை செய்தும் புண்ணியம் செய்தும் ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம் என்பதை உணர்வான்.
முருகா என்றால், பாவபுண்ணியத்தில் நம்பிக்கையும், கடவுள் நம்பிக்கையும், நாம் முன்செய்த நல்வினையால் வந்தது, மேலும் முருகப்பெருமான் ஆசி துணை கொண்டு பூசை செய்தும் புண்ணியம் செய்தும் ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம் என்பதை உணர்வான்.
முருகனை வணங்கிட: இருவினையும் அறிந்து வென்று இனி பிறவா மார்க்கத்தையும் அடையலாம். அண்டத்தை காக்கவே அவதரித்தான் முருகனென்றே கண்டு கொண்டாலே போதும் காணுமே உண்மை. அற்புதம் நிறைந்த கற்பக திருவே ஆறுமுகப் பெருமானே போற்றி போற்றி முருகப்பெருமான் ஆசியை பெற விரும்புகின்ற மக்கள் உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து சுத்த சைவ உணவை மேற்கொண்டு மாதம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்து “ஓம் சரவண ஜோதியே நமோ நம” என்றோ, “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ, … Read more
முருகனை வணங்கிட: தன்னைப் பற்றி அறிகின்ற அறிவே சிறப்பறிவாகும் என்றும், அதுவே சாகாக்கல்வி என்றும் அறியலாம். சாகாக்கல்வியை முருகன் அருளினால்தான் பெறக்கூடும் என்றும், முருகன் அருளைப் பெற ஜீவதயவே சாதனமாகும் என்பதையும் உணர்வான். உலக உயிர்களிடத்து எந்த அளவிற்கு ஜீவதயவை செலுத்துகிறோமோ அந்த அளவிற்கு அந்த ஜீவதயவே தவமாய் மாறி ஜீவதயவின் தலைவன் முருகனது ஆசியைப் பெற்று தவத்தினால் வெற்றி பெற்று தன்னையறியும் சிறப்பறிவான சாகாக்கல்வியை கற்று ஞானம் அடையக் கூடும் என்பதையும் அறியலாம்.
முருகப்பெருமானை வணங்கிட : ஞானம் என்ற சொல்லே முருகன் தான் என்றும் அதுவே உண்மை அறிவு என்பதையும் அறியலாம். மாசற்ற முருகனின் மலரடி போற்றிட ஆசற்ற வாழ்வும் அருளும் உண்டாம்! வெல்லரிய மாயையை வென்ற முருகனை நல்லுணர்வாய் போற்றிட நலமே! ஆற்றலாம் முருகனின் அருளை தினமும் போற்றியே மகிழ்வர் புண்ணியரே!
முருகனை வணங்கிட : காலத்தையும் காலனையும் வென்ற கந்தபெருமான் திருவடியைப் போற்றி வணங்கிட காலனை வெல்லும் உபாயத்தினை பெறலாம். அதுவே சிறப்பறிவாகும்.
முருகப்பெருமானை வணங்கிட : முப்பத்து முக்கோடி தேவர்களின் ஆசியையும், நாற்பத்து எட்டாயிரம் ரிஷிமார்களின் ஆசியையும், அஷ்ட திக்கு பாலகர்களின் ஆசியையும், தேவாதி தேவர்கள் ஆசியையும், தேவதைகளின் ஆசியையும், நவகோடி சித்தரிஷி கணங்களின் ஆசியையும் ஒருங்கே பெற்றுக் கொள்ளலாம் என்று அறியலாம். சத்திய முருகன் தாளினை போற்றிட சித்திகள் எட்டும் திடமாம் சித்தியே. வள்ளல் முருகனடி வாழ்த்துவோம் எல்லா நலமும் பெற்று இன்புற்று வாழ்வோம்.
முருகப்பெருமானை வணங்கிட : பாவபுண்ணியத்தை அறிந்து கடந்த முருகப்பெருமான் திருவடிகளை பூசிக்காவிட்டால் பாவபுண்ணியத்தைப் பற்றி கடுகளவும் அறிந்து கொள்ள முடியாது என்பதை அறியலாம். வல்லவன் முருகன் வந்தே உலகில் நல்லதோர் ஆட்சி நடத்திடல் நலமே! ஏங்கி தவிக்கும் ஏழைகள் வாழ பாங்காய் ஆட்சி பகர்வான் முருகனே!
முருகப்பெருமானை வணங்கிட : நாம் செலுத்துகின்ற பக்தியை ஏற்றுக்கொண்டு நாமும் அவனைப்போல் ஆகலாம் என்கிற உண்மையையும் அதற்குரிய வழிமுறைகளை வாய்ப்புகளையும் அறியலாம். விரைந்து வந்தே வேற்படை முருகா சிறந்த ஆட்சி செய்திடல் நலமே.